தமிழ் திரை உலகப் பொருத்தவரை திரையில் நடித்த சக நடிகைகளையே காதலித்து திருமணம் செய்தவர்களின் வரிசையில் நடிகை ஷாலினி மற்றும் அஜித்தை கூறலாம்.
அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படத்தில் தான் இவர்களுக்கு காதல் மலர்ந்தது. இதனை அடுத்து கடந்த 2000 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
மேலும் தற்போது இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் இவர்களது மூத்த மகளான அனோஷ்காவிற்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் படு விமர்சியான முறையில் கொண்டாடப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்த சந்தோஷகரமான நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் தற்போது ஷாலினி அஜித் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் அந்தப் புகைப்படத்தை இவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங் என்ற ஒரு பதிவையும் இணைத்து பதிவிட்டு இருப்பதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அஜித்தின் மூத்த மகளுக்கு வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் ரசிகர்கள் அனைவரும் அஜித்தின் மகள் எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா என்ற கேள்வியை ஆச்சரியத்தோடு கேட்டிருக்கிறார்கள்.இதனை அடுத்து பொங்கல் அன்று வரவிருக்கும் அஜித்தின் துணிவு படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் தற்போது வெளிவந்திருக்க கூடிய இரண்டு சூப்பர் ஹிட் பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதால் இந்த படமும் வெற்றி அடையும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறுகிறார்கள்.
மேலும் அஜித்தின் மகள் எப்போது திரை உலகிற்கு அறிமுகம் செய்யப்படுவார் என்பது பற்றிய கேள்விகளையும் சில ரசிகர்கள் எழுப்பி இருக்கிறார்கள். அதற்கான பதிலை ஷாலினி அல்லது அஜித் தருவார்களா? என்று ஆவலோடு ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் பிறந்த நாளை மிக எளிமையாக கொண்டாடி இருப்பதை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.