இடைவேளையில் விஜய் பட பாடல் ஒளிபரப்பு.. எதிர்ப்ப்பு தெரிவித்து ரசிகர்கள் ரகளை.. என்ன காரணம்..?

திரை உலகில் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருப்பது போல இரண்டு ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது புதிதான விஷயமாக உங்களுக்கு இருக்காது. அந்த வகையில் உதாரணமாக எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சொல்லலாம்.

அது போல தமிழ் திரை உலகின் இடைக்காலத்தில் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆதிக்கம் செலுத்தி வந்ததை அடுத்து தற்போது தல அஜித் மற்றும் தளபதி விஜய் என இருவரது ஆதிக்கம் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுகிறது.

இடைவெளியில் விஜய் பட பாடல்..

அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கின்ற ரசிகர்கள் பல விஷயங்களில் போட்டி போட்டுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சில நேரம் அடிதடிகளும் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

தல அஜித்தும், தளபதி விஜயுமே அமைதியாக இருக்கக் கூடிய காலகட்டத்தில் அவர்கள் பெயரை சொல்லி ரசிகர்கள் இது போன்ற அமளி துமளிகளில் ஈடுபடுவது அவசியமா? என்ற கேள்வியை அவர்களே ஒரு முறை கேட்டுக் கொண்டால் உண்மை என்ன என்பதை உணர்வார்கள்.

எனினும் தளபதி மற்றும் தலையின் வெறியர்களாக இருக்கக்கூடிய ரசிகர்கள் தற்போது செய்திருக்கும் செயலானது பரவலாக தமிழகம் எங்கும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் ரகளை..

இந்நிலையில் ஏற்கனவே நடித்த படங்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படுவது தற்போது தமிழ் படங்களில் அதிக அளவு நடந்தேறி வருகிறது.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த கில்லி திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது உங்கள் நினைவில் இருக்கலாம்.

அது போலவே நடிகர் அஜித்தின் தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட திரையரங்கில் இடைவேளையின் போது நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான கோட் திரைப்படத்தின் பாடல் விசில் போடு.. ஒளிபரப்பு செய்யப்பட்டது.

என்ன காரணம் தெரியுமா?

திடீர் என தல அஜித் படத்தின் இடைவேளை சமயத்தில் தளபதி விஜயின் பாடல் ஒளிபரப்பானதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆப்பரேட்டர் சட்டையை கழட்டி காட்டி ஒளிபரப்ப தடை செய்து கூச்சல் போட்டார்கள்.

தற்போது இணையம் முழுவதும் இந்த வீடியோ காட்சி தான் இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் இப்படியும் ரசிகர்கள் இருப்பார்களா? என்ற கேள்வியை கேட்க வைத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து வெகு ஜனங்களின் மத்தியில் எந்த செயலுக்கு கலவை ரீதியான விமர்சனங்கள் வெளி வந்துள்ளதோடு இந்த வீடியோவை அதிக அளவு பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

அத்தோடு ரசிகர்கள் அனைவரும் இது போல செயல்படுவது தவறு என்பதை எப்போது உணர்ந்து கொள்வார்கள்.

இப்படிப்பட்ட தனி மனித வழிபாட்டால் சுய ஒழுக்கம் சுய கௌரவம் போன்றவை காற்றில் பறக்க விட க்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை எப்போது உணர்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இனி வரும் காலங்களிலாவது இது போன்ற சிக்கல்களை இரு தரப்பு ரசிகர்களும் ஏற்படுத்தாமல் இருப்பதின் மூலம் நன்மை ஏற்படும் என்பதை உணர்ந்து செயல்படுவார்களா? இல்லை இது போலவே காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வார்களா?

இந்த கேள்விக்கான விடை விரைவில் தெரிய வரும் அது வரை நாம் காத்திருப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தும் புரிந்தும் நடக்க வேண்டும்.

இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version