34 ஆண்டுகள் கழித்து அஜித்துக்கு ஜோடியாகும் 57 வயசு நடிகை..!

தமிழ் திரையுலகை பொருத்த வரை ரஜினிகாந்த், கமலஹாசன் அடுத்ததாக தளபதி விஜய் மற்றும் தல அஜித் இவர்கள் இருவரும் மிகவும் முன்னணி நடிகர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் விரும்பும் நாயகர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: என்ன கன்றாவி இது..? தமன்னாவின் காதலன் மீது குத்த வைத்து படுக்கையில் ஜான்வி கபூர்..

திரை உலகில் எந்த வித பின்னணியும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் இந்த அளவு முன்னேறி இருக்கும் தல அஜித் பல்வேறு படங்களில் தனது அற்புத நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனக்கு என்று  ரசிகர் படையை அமைத்துக் கொண்டவர்

தல அஜித்..

ஆரம்ப நாட்களில் அஜித் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றியை அவருக்கு தரவில்லை. இருந்தாலும் முயற்சியை விடாமல் ஒவ்வொரு படத்திலும் தனது உழைப்பை போட்ட அஜித் வாலி திரைப்படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று விட்டார்.

 

அத்தோடு காதல் மன்னன் ஜெமினி கணேசன் போல இவரையும் காதல் மன்னன் என்றே அழைத்தார்கள். அதற்கு காரணம் காதல் கோட்டை திரைப்படத்தில் காதலியை பார்க்காமல் உருகி, உருகி தேவயானியை காதலித்து அந்த படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாற்றிய பெருமை இவரது நடிப்பை சாரும்.

 

இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் ரஜினிகாந்தை போல பில்லா படத்தில் பட்டையை கிளப்பி திரையுலத்தில் தான் ஒரு அசைக்க முடியாத தல என்பதை நிரூபித்து விட்டார்.

57 வயசு நடிகை ஜோடி..

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்குமார் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏறக்குறைய 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆங்கில திரைப்படத்தின் தலைப்பை தமிழ் திரைப்படத்திற்கு வைத்திருக்கிறார்கள் என்று கூறலாம்.

மேலும் இந்த திரைப்படத்தில் மூன்று வேடங்களில் தல அஜித் நடிக்க இருப்பது ரசிகர்களின் மனதில் ஆசையை தூண்டி விட்டு உள்ளது. இதில் அப்பா, மகன் மற்றும் வில்லன் என மூன்று கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தல அஜித் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

34 ஆண்டுகள் கழித்து இணையும் நடிகை..

அடுத்து ரசிகர்களின் மனதில் பட்டாசை கிளப்பி விட்டு இருக்கும் இந்த கேரக்டர்களை திரையரங்குகளில் சென்று பார்க்கக்கூடிய ஆவலில் இருக்கக்கூடிய சமயத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிகை நதியாவை ஜோடியாக நடிக்க வைக்க இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

மேலும் இதில் சென்டிமென்ட் ஆன விஷயம் என்னவென்றால் அஜித் முதல் முதலாக அறிமுகமான திரைப்படமான என் வீடு என் கணவர் படத்தில் ஹீரோயினியாக நடித்தவர். நடிகை நதியா தான் 1990 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தை செண்பகராமன் இயக்கியிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்தப் படத்தில் என் கண்மணி என்ற ஒரு பாடலில் பள்ளி மாணவராக தோன்றிய நடிகர் அஜித் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய போதும் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியை இந்த படம் தரவில்லை.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

அத்தோடு இந்த படம் வெளி வந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகை நதியா அஜித்துக்கு ஜோடியாக மாற இருக்கிறார் என்ற தகவல் கசிந்து வருகிறது. எனினும் இந்த தகவல்களில் உண்மை ஏதும் உள்ளதா? என்பது பற்றி பட குழு தரப்பில் அதிகாரப்பூர்வமான செய்திகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version