எஸ்.ஜே சூர்யா கோலத்தை கண் கலங்கிய அஜித்.. அந்த வலி மிகுந்த பக்கம் யாருக்கும் தெரியாது..!

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பிறகு மக்கள் மத்தியில் இயக்குனராக வலம் வந்து தற்சமயம் நடிகராக இருந்து வருபவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. பிரபல இயக்குனரான வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஜே சூர்யா பல கஷ்டங்களை அனுபவித்துதான் பிறகு இயக்குனராக மாறினார்.

இப்பொழுது கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகராக இருந்தாலும் கூட அவரது ஆரம்பகட்ட வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருந்தது என்று கூறப்படுகிறது. இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கால கட்டங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில்தான் இருந்திருக்கிறார் எஸ்.ஜே சூர்யா.

ஆசை திரைப்படத்தில் அவரது உழைப்பை பார்த்துதான் அஜித் பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதனை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவிற்கு முதல் படத்திற்கான வாய்ப்பை கொடுத்தார்.

 எஸ்.ஜே சூர்யா நிலை:

அப்படியாகதான் எஸ்.ஜே சூர்யா, வாலி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். வாலி திரைப்படமும் மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது. ஆனால் வாலி திரைப்படத்தை இயக்கும் பொழுது எஸ்.ஜே சூர்யா கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது.

வாலி திரைப்படத்திற்காக அஜித்திடம் கதை சொல்ல வரும்பொழுது எஸ்.ஜே சூர்யாவை பார்த்து அஜித் கண்கலங்கியதாக கூறுகிறார் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு. அதில் அவர் கூறும் பொழுது முதல் முறை எஸ்.ஜே சூர்யா அஜித்திடம் வாலி திரைப்படத்தின் கதையை கூறுவதற்காக சென்றபொழுது நல்ல உடை கூட அவர் உடுத்தவில்லை.

மேலும் மிகவும் பசியில் இருந்தார் அந்த பசி மயக்கத்திலேயே அவர் அஜித்திடம் சென்று நின்றார். எஸ்.ஜே சூர்யாவின் முகத்தை பார்த்ததுமே அஜித்திற்கு புரிந்து விட்டது அவர் மிகுந்த பசியில் இருக்கிறார் என்பது,

அஜித் செய்த உதவி:

உடனே எஸ்.ஜே சூர்யாவை அழைத்து எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது வாருங்கள் இருவரும் போய் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று கூறி எஸ்.ஜே. சூர்யாவை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் அஜித்.

அங்கு இருவரும் சாப்பிட்டுள்ளனர் அப்பொழுது எஸ்.ஜே சூர்யாவின் செருப்பை பார்த்து இருக்கிறார் அஜித். எஸ்.ஜே சூர்யா ஒரு பழைய செருப்பு ஒன்றை போட்டு இருந்தார். அந்த செருப்பு முழுவதுமாக தேய்ந்து ஓட்டை விழுந்து காணப்பட்டது.

அதனை பார்த்து கண் கலங்கிய அஜித் இவ்வளவு வறுமையில் இருக்கிறாரே இவர் என்று நினைத்து உடனே அவருக்கு ஒரு புது செருப்பை வாங்கி கொடுத்தார். அடுத்த சில நாட்களிலேயே எஸ்.ஜே சூர்யாவின் படத்தையும் கமிட் செய்தார். அதற்கு பிறகு அந்த திரைப்படத்தில் கமிட் ஆன உடனே எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு பெரும் தொகையும் அட்வான்ஸ் ஆக கிடைத்தது இது அனைத்தையும் அஜித் எஸ்.ஜே சூர்யாவிற்காக செய்தார். அந்த நன்றியை மறக்காத எஸ். ஜே. சூர்யா இப்பொழுது மேடைகளில் பேசும்பொழுதும் அஜித்தை புகழ்ந்து பேசுவதை பார்க்க முடியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version