வந்தாச்சு …வந்தாச்சு… துணிவு படத்தின் அடுத்த பாடல் பற்றிய அப்டேட்…!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

 தல அஜித்தின் துணிவு படம் மிக விரைவில் வெளிவர உள்ள நிலையில் இந்தப் படத்தின் சில்லா சில்லா சில்லா பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. மட்டுமல்லாமல் வாரிசு படத்தின் ரஞ்சிதமே படத்தை தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிக அளவு வியூவர்ஸை பெற்றது.

 வரும் பொங்கலுக்கு விருந்தாக அமையக்கூடிய இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கக் கூடிய  சமயத்தில் மீண்டும் காதுகளுக்கு தேன் பாயக்கூடிய செய்தி வெளிவந்துள்ளது.

 அது என்ன என்றால் இந்தப் படத்தில் இருந்து காசேதான் கடவுளடா என்ற இரண்டாவது சிங்கள் பாடல் மிக விரைவில் வெளிவரும் என இசையமைப்பாளர் ஜிப்ரன் சூசகமாக கூறியுள்ளது தான்.

மேலும் எச் வினோத் மற்றும் போனி கபூரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தப் படம் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

 மேலும் படத்தின் பிரமோஷன் பணிகள் படு பிஸியாக நடந்து வரும் வேலையில் சமூக வலைத்தளத்தில் இது போன்ற செய்தியை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ஆசையை தூண்டி விட்டிருக்கிறார்.

 ஏற்கனவே சில்லா சில்லா சில்லா பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில் அடுத்ததாக வெளிவரக்கூடிய இந்தப் பாடல் தரமாக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கை இருக்கிறார்கள்.

 இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்ததோடு மட்டுமல்லாமல் வீரா,ஜான்,கொகைன்  போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் துணிவு படத்தில் மொத்தமே மூன்று பாடல்கள் உள்ள நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே இந்த மூன்று பாடல்களும் வெளிவந்து விடக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதனை அடுத்து சமூக வலைத்தளத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த செய்தியை எதிர்பார்த்து ரசிகர்கள் தற்போது பாடலைக் கேட்கக் கூடிய ஆவலை காத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …