“துணிவு” ரிலீஸ் அப்டேட்..! – ஆர்பரிப்பில் ரசிகர்கள்..!

எஸ் வினோத் உடன் மீண்டும் கூட்டணி அமைத்து  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதம் மீண்டும் தல அஜித் நடித்திருக்கக் கூடிய திரைப்படம்தான் துணிவு. இவர் ஏற்கனவே வினோத் இயக்கத்தோடு இணைந்து  வலிமை படத்தில் நடித்திருக்கிறார்.

துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கேரள அழகி மஞ்சுவாரியார் சிறந்த வேடத்தில் நடித்திருக்கிறார். வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாங்காங்கில் தற்போது நடந்து முடிந்து உள்ளது.

 இதனை அடுத்து இந்த படத்தின் ஷூட்டிங் முழுமை அடைந்து விட்டதால் இதன் ரிலீஸ் தேதியை எப்போது போனிகபூர் அறிவிப்பார் என்று தல அஜித்தின் ரசிகர்கள் மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

 திரை உலகில் போட்டி பஞ்சமில்லாத நடிகர்களான தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் படங்கள் பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்களுக்கு விருந்தாகுமா?

ஏனென்றால் விஜய்யின் வாரிசு படம் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிந்தவுடன் பொங்கலுக்கு வரலாம் என்ற செய்தி காற்றுவாக்கில் வந்துள்ளது.

 இதனைத் தொடர்ந்து விஜய்க்கு போட்டியாக அஜித்தின் துணிவு படம் களமிறக்கப்படும். அதாவது பொங்கல் அன்று ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வியை  ரசிகர்கள் கேட்கிறார்கள்.

இதற்கு பதில் அளிப்பது போல் தற்போது பொங்கலுக்கு துணிவு படம் திரைக்கு வருவது போலவும் படம் வெளியாகக் கூடிய தியேட்டர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஒரு போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இது எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது இப்போதுவரை தெரியவில்லை.

 எனினும் தலை மற்றும் தளபதி இவர்கள் இருவரின் படங்களும் கட்டாயம் பொங்கலுக்கு வந்தால் அதைவிடச் சிறப்பு அந்த பொங்கலுக்கு இல்லை என்று கூறும் அளவு இரு தரப்பு ரசிகர்களும் ஆவலோடு காத்திருப்பதால் மிக விரைவில் போனிகபூர் அதற்கானஅறிவிப்பை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …