தரக்குறைவாக பேசிய வடிவேலு.. பதிலுக்கு அஜித் செய்த விஷயம்தான் ஹைலைட்..

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு இங்கு இருந்து வருகிறது. ஏனெனில் பிரபலமான நடிகர்களில் அஜித் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமானவர்.

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அஜித் ரசிகர்கள் அவரை விரும்புவதற்கு எக்கச்சக்கமான காரணங்கள் உண்டு. அதிக திறமை வாய்ந்த ஒரு நபராக அஜித் பார்க்கப்படுகிறார். நிஜ வாழ்க்கையில் பல துறைகளில் ஆர்வம் கொண்ட ஒரு நபராக அஜித் இருந்து வருகிறார். அதேபோல மக்கள் பலருக்கும் அவர் நிறைய நன்மைகளை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது

அஜித்திற்கு வரவேற்பு:

தற்சமயம் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் நடித்து வந்தார். ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு நாட்களாக நடந்து வந்ததை அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு நடிக்க சென்று விட்டார் அஜித்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார் இந்த படம் குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. சினிமா துறையை பொறுத்தவரை அஜித்திற்கு பெரிதாக எதிரிகள் என்று யாரும் கிடையாது.

போட்டி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் கூட அஜித்தின் நண்பராகதான் இருந்து வருகிறார். அந்த அளவிற்கு அஜித் அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர் என்று கூறப்படுகிறது. அப்படி இருந்தும் கூட அஜித்திற்கும் நடிகர் வடிவேலுக்கும் இடையே பிரச்சனைகள் இருந்திருக்கின்றன.

மரியாதையான நடிகர்:

பொதுவாகவே நடிகர் அஜித் அவர் பழகும் அனைவரிடமும் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ள கூடியவர் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்தை போடா வாடா என்று அழைத்து விட்டதாக கூறப்படுகிறது.

பெரும்பாலும் அது ராஜா என்கிற திரைப்படத்தில் நடந்த நிகழ்வுதான் என்று கூறப்படுகிறது. அதற்குப் பிறகு அஜித்திற்கும் வடிவேலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர்கள் இருவரும் பிறகு சேர்ந்து நடிக்கவே இல்லை.

வடிவேலுவிற்கு பதிலடி:

ஆனால் ஒரு மேடையில் வெகுகாலங்களுக்கு பிறகு வடிவேலுவை நேருக்கு நேர் பார்த்த அஜித் அவரிடம் நன்றாக இருக்கிறீர்களா அண்ணே? என்று கேட்டிருக்கிறார். அப்பொழுது வடிவேலுவுக்கே இவரையா நாம் மரியாதை இல்லாமல் பேசினோம் என்று தோன்றி விட்டதாம்.

அந்த அளவிற்கு லைட் மேனில் துவங்கி டெக்னீசியன் வரை அனைவரிடமும் பண்பாக நடந்து கொள்ளக் கூடியவர் அஜித். அதேசமயம் அந்த மரியாதையை மற்றவர்களும் அவருக்கு அளிக்க வேண்டும் என்று அஜித் எதிர்பார்ப்பார் என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version