அஜித்தின் சுயநலம்.. சோகத்தில் ஷாலினி.. SHAMILI மீது குற்றச்சாட்டு.. திடீரென நிறுத்தப்பட்ட திருமணம்..  நள்ளிரவில் நடந்த கூத்து..!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமான நடிகராக அஜித் இருந்து வருகிறார். தனக்கென ரசிகர் மன்றம், ரசிகர்கள் மீட்டிங், விருது வழங்கும் விழா என்று எதுவுமே நடக்காத போதும் கூட அஜித்துக்கு இருக்கும் ரசிகர்கள் என்பது குறையவே இல்லை.

இந்த நிலையில் தொடர்ந்து பல காலங்களாக அஜித் குறித்து நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இதெல்லாம் குறித்து பத்திரிகையாளர் சுபாயர் ஒரு பேட்டியில் விளக்கங்களை கொடுத்திருக்கிறார்.

ஷாலினி நடிக்காததற்கு காரணம்:

அதில் அவரிடம் கேட்கும் பொழுது நடிகை ஷாலினி அஜித்தை திருமணம் செய்த பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. அது அஜித் போட்ட விதிமுறையின் காரணத்தினால் தானா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுபாயர் கூறும் பொழுது ஷாலினி சிறுவயதாக இருக்கும் பொழுது  100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து விட்டார்.

அப்பொழுதெல்லாம் மிகவும் பிரபலமானவராக ஷாலினி இருந்தார். அதற்கு பிறகு தமிழில் காதலுக்கு மரியாதை, அலைபாயுதே போன்ற படங்கள் மூலமாக பிரபலம் அடைந்தார். ஆனால் அவருக்கும் அஜித்துக்கும் காதல் ஏற்பட்ட பிறகு அஜித்தின் குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஒருவர் தேவைப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு ஷாலினிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன இவர்களை எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஷாலினி சினிமாவை விட்டு நின்றார் என்று கூறுகிறார் சுபாயர். அதேபோல ஷாமிலி ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று கேட்கப்பட்டது.

ஷாமிலிக்கு இருக்கும் பிரச்சனை:

அதற்கு பதில் கூறும் பொழுது ஷாமிலி இன்னமும் திரைத்துறையில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறார். தொடர்ந்து அதற்கு முயற்சித்தும் வருகிறார். அவர் கதாநாயகியாக நடித்த சில திரைப்படங்களும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

எனவே சினிமாவில் நடிகையாகி விட்டுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறார். இதற்கு நடுவே ஷாமிலிக்கும் அஜித்துக்கும் பிரச்சனை இருப்பதாகவும் வதந்திகள் இருந்து வந்தன. ஆனால் ஷாமிலி, ஷாலினி, அஜித் மற்றும் அவரது குழந்தைகள் இவர்களெல்லாம் இப்பொழுதும் ஒன்றாக தான் இருந்து வருகின்றனர் என்று சுபாயர் கூறுகிறார்.

அப்போது அவரிடம் கேட்ட நிருபர் ஏன் ஷாமிலிக்கு நடிகர் அஜித் வாய்ப்பு தரக்கூடாது என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சுபாயர் குடும்பம் வேறு சினிமா வேறு என்பதில் அஜித் மிகவும் தெளிவாக இருப்பார். இத்தனை காலங்களாக அவரது வீட்டிலேயே மூன்று நட்சத்திரங்கள் இருந்தும் அவர்கள் யாருக்குமே அஜித் தனது திரைப்படத்தில் வாய்ப்புகள் கொடுத்தது கிடையாது.

ஷாலினியாக இருக்கட்டும் ஷாமிலியாக இருக்கட்டும் மற்றும் அவர்களது சகோதரரான ரிச்சர்டாக இருக்கட்டும். இவர்கள் எல்லோருமே சினிமாவில் நட்சத்திரங்களாக இருப்பவர்கள்தான் அதிலும் ரிச்சர்டும் ஷாமிலியும் இப்பொழுதும் தமிழில் பிரபலம் ஆவதற்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அஜித் நினைத்தால் அவர்களுக்கு அவரது திரைப்படத்திலேயே வாய்ப்பு கொடுத்து பிரபலம் ஆக்கிவிடலாம். ஆனால் குடும்ப நபர்களை சினிமாவிற்குள் சப்போர்ட் செய்து கொண்டு வருவதில் அஜித்திற்கு விருப்பமில்லை என்று கூறுகிறார் சுபாயர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version