இன்னா தல..! – நாடு நாடா பைக் ரைடு போனது.. இதுக்குத்தானா..? – உச்ச கட்ட மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்..!

Ajith World Tour Documentary : நடிகர் அஜித்குமார் கடந்த சில மாதங்களாகவே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தன்னுடைய விலை உயர்ந்த பைக்கை எடுத்துக் கொண்டு ஒரு சுற்றுலா போல தன்னுடைய ஓய்வு நேரத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இவர் நாடு நாடாக பைக் ரைடிங் சென்றது குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

சமீப காலமாக, OTT தளங்களின் வளர்ச்சி என்பது அபாரமாக இருக்கின்றது. புதிய படங்கள் ஒரு மாதத்திற்குள் OTT தளங்களில் வந்துவிடுகின்றன. இதனால் நாளுக்கு நாள் OTT தளங்களின் வளர்ச்சி என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

Ajith World Tour-Documentary – Netflix

இந்நிலையில் நடிகர் அஜித்தின் உலக சுற்றுப் பயணம் அஜித் வேர்ல்ட் டூர் என்ற பெயரில் டாக்குமெண்ட்ரி ஒன்றை தயாரித்து வெளியிட இருக்கிறது பிரபல OTT நிறுவனமான NETFLIX.

இதனை பிரபல கேமராமேன் நிரவ் ஷா வீடியோவாக பதிவு செய்யவிருகிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எனவே நடிகர் அஜித்குமார் நாடு நாடாக பைக் ரைடிங் சென்றதன் ரகசியம் இது தான் என்பது தற்போது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.

Ajith World Tour-Documentary – Netflix

கடைசியாக இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். நடிகர் அஜித்தின் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை உலகம் முழுதும் பெற்ற இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

Ajith World Tour-Documentary – Netflix

இதற்கிடையில் உலகம் முழுதும் இருக்கக்கூடிய சாலைகளில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய விலை உயர்ந்த பைக்கில் பயணம் செய்வது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வந்தது.

அவ்வப்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று வந்த இந்த புகைப்படங்கள். இந்நிலையில் இந்த சுற்றுலாவே நடிகர் அஜித்தின் டாக்குமென்ட்ரி ப்ராஜெக்டை ஒட்டியது தான் என தெரிய வந்திருக்கிறது.

Ajith World Tour-Documentary – Netflix

இவர் பயணம் செய்த அனைத்து பயணத்தையும் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா வீடியோவாக பதிவு செய்ய இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித்தின் உலக சுற்றுலா ( Ajith’s World Tour ) என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்த ஆவணப்படம் மீது அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். மேலும் இந்த தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …