“அஜித்-தை வச்சி படம் பண்ற ஆசையே வரக்கூடாது…” – துணிவு குறித்து இயக்குனர் ஹெச்.வினோத் அதிரடி..!

பிரபல இயக்குனர் வினோத் துணிவு ( Thunivu ) திரைப்படம் குறித்தான தனது அனுபவங்களை ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கிறது.

இந்த பேட்டியில் பல்வேறு விதமான கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன. முக்கியமாக அஜித் குமார் போன்ற ஒரு பெரிய நடிகரின் படத்தை இயக்கும் பொழுது.. எங்கு திரும்பினாலும்.., படம் எப்படி வந்திருக்கிறது..? படம் எப்படி இருக்கிறது..? படம் என்ன நிலையில் இருக்கிறது..? இப்படியான கேள்விகளை எதிர் கொள்கிறீர்கள்.

இப்படியான எதிர்பார்ப்புகள்.. ஒரு இயக்குனராக உங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கிறதா..? அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கூறுங்கள் என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த இயக்குனர் வினோத். நாம் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்.. நமக்கென்று ஒரு யோசனை இருக்கிறது.. படம் இப்படித்தான் வர வேண்டும் என்ற சிந்தனை இருக்கிறது.. ஆனால் ரசிகர்களின் யோசனை என்ன..? ரசிகர்களின் தன்மை என்ன..? படம் யாரை சென்று சேரப்போகிறது..? அவர்களுடைய எதிர்பார்ப்பு என்ன..? இதையெல்லாம் கலந்துதான் ஒரு படத்தை ஒரு இயக்குனராக இயக்க வேண்டியிருக்கிறது.

ஒரு தரப்பு ரசிகர்கள் மங்காத்தா போன்ற படத்தை எதிர்ப்பார்ப்பார்கள். ஒரு தரப்பு ரசிகர்கள் பில்லா போன்ற படத்தை எதிர்ப்பார்ப்பார்கள். இன்னும் சில ரசிகர்கள் விசுவாசம் போன்ற படத்தை எதிர்பார்ப்பார்கள்.

இப்படியான எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி மார்க்கெட் என்ற ஒன்று இருக்கிறது. பெரிய நடிகர்.. பெரிய இசையமைப்பாளர்.. பெரிய தயாரிப்பு நிறுவனம்.. பெரிய பட்ஜெட்.. என என்னதான் பெரிது பெரிதாக இருந்தாலும் அவை அனைத்துமே ஒரு வியாபார நோக்கத்திற்காக தான் என்பது உச்சகட்ட உண்மை.

இந்த படத்தை வியாபாரம் செய்ய தான் நாங்கள் தயாரிக்கும்.. இயக்குகிறோம். அப்போது மார்க்கெட் நிலவரம் என்ன..? திரையரங்க உரிமையாளர்கள் எப்படியான படத்தை எதிர்பார்க்கிறார்கள்..? எப்படியான படம் நிலைத்து நிற்கிறது.. வெற்றிபெறுகிறது.. இதையெல்லாம் பல விஷயங்களில் யோசித்து ஒரு படத்தை இயக்க வேண்டியிருக்கிறது.

துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. என்னதான் கமர்ஷியலாக இருந்தாலும் கூட படத்தின் வியாபாரத்திற்காக தவறான ஒரு முயற்சியை அல்லது தவறான ஒரு தகவலை படத்தை பார்க்க கூடிய வர்களிடம் கொண்டு சேர்த்த விடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

ஒரு தரப்பு ரசிகர்கள் அஜித்தை திரையில் பார்த்தாலே ஆர்ப்பரிக்க தொடங்கி விடுவார்கள். இன்னும் சிலர் அஜித் கோபமாக பேசும் பொழுதோ..? அல்லது எதிரிகளுடன் சண்டையிடும் பொழுதோ..? ஆர்ப்பரிப்பரிப்பார்கள்.

அப்படியான ரசிகர்களுக்கு திரைக்கதையில்.. ஒரு ஸ்லோ மோஷன் ஷாட்-டாவது வைக்க வேண்டியது கட்டாயம். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் படத்தை எடுப்பது என்பது இயலாத காரியம்.

இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டு இருந்தால் அஜீத்தை வைத்து படம் எடுக்கும் ஆசையே இருக்கக் கூடாது. நம்முடைய கதை.. நம்முடைய இயக்கம்.. நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் படமாக வரவேண்டும் என்ற ஒரு விஷயம் இருந்தாலும் கூட ரசிகர்களின் மனநிலை அவர்களுடைய எதிர்பார்ப்பு திரையரங்க உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு அதையெல்லாம் தாண்டி சினிமா மார்க்கெட் எப்படி இருக்கிறது இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அந்த கதையை ஒரு திரைக்கதையாக திரைக்கு கொண்டுவர வேண்டும்.

அந்தவகையில் துணிவு திரைப்படம் மிகவும் அருமையாக ஒரு கமர்சியல் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆனதா..? என்பதை படம் வெளியான அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version