ப்பா.. என்ன மனுஷன்யா..? – தலையே போனாலும் இந்த காட்சி கூடவே கூடாது..! – ஹெச்.வினோத்திற்கு அஜித் ஆர்டர்..!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “துணிவு” வரும் ஜனவரி மாதம் 11ஆம் தேதி பொங்கல் பரிசாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் குறித்தான தகவல்களை சமூக வலைதளங்களில் உள்ள சேனல்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார் இயக்குனர் வினோத். அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவரிடம் துணிவு படம்  உருவான விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த வினோத் கூறியதாவது, வலிமை படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் சாரிடம், சார் நான் ஒரு ஸ்க்ரிப்ட் வைத்திருக்கிறேன். சில காட்சிகளை கூறுகிறேன் கேளுங்கள் என்று கூறினேன். அவரும் சொல்லுங்கள் கேட்போம் என்றார்.

ஒரே ஒரு காட்சியை மட்டும் தான் கூறினேன். உடனே குபீர் என சிரித்தார். கண்டிப்பாக இந்த படத்தை நாம் செய்வோம் என்று கூறினார். அதுதான் துணிவு. ஆனால், எந்த காட்சியை கேட்டு படத்தில் நடிக்க சம்மதித்தாரோ அந்த காட்சி படத்தில் இல்லை என்பதுதான் விஷயமே.

ஏனென்றால் அந்த காட்சியை தனியாக கேட்கும் போது நன்றாக இருக்கின்றது. ஒரு தனிப்பட்ட நபராக அந்த காட்சியை நான் ரசித்தேன். ஆனால், ஒரு படமாக அந்த காட்சியை பதிவாக்கி பொதுவெளியில் வெளியிடும் பொழுது அது குறிப்பிட்ட சிலரின் மனதை காயப்படுத்தும் விதமாக இருக்கிறது.. அதனால், தலையே போனாலும் அந்த காட்சியை படத்தில் வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.

என்னுடைய படத்தில் காட்சிகள் நன்றாக வருகிறது.. நன்றாக இல்லை.. என்பதெல்லாம் இரண்டாவது விஷயம். ஆனால், படத்தில் வரக்கூடிய எந்த ஒரு காட்சியும் ஒரு தரப்பினரை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவும் இன்னொரு தரப்பினரை காயப்படுத்தும் விதமாகவும் அமைந்து விடக்கூடாது.

என்னுடைய படங்களில் இப்படியான காட்சிகள் தலையே போனாலும் இருக்கக்கூடாது. அதில் நான் கவனமாக இருக்கிறேன் என்று இயக்குனர் வினோத்திற்கு அந்த காட்சியை வைக்க வேண்டாம் என்று சொல்லி கட்டளை இட்டிருக்கிறார் அஜித்.

சமீபகாலமாக, நடிகர்கள் வெற்றி படங்களை கொடுக்க வேண்டும்.. அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர வேண்டும் என்ற காரணத்திற்காக குறிப்பிட்ட நபர்களை மட்டும் இல்லாமல் ஒரு சமுதாயத்தையே கூட பழிச்சொல்லுக்கு ஆளாக்கி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குளிர்விக்கும் விதமாக திரைக்கதைகளை எழுதி திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

உச்சகட்டமாக உண்மையாக நடந்த சம்பவத்தை திரைப்படமாக எடுக்கும்போது கூட.. யார் தவறு செய்தார்களோ..? அவருடைய மதம் மற்றும் சாதி இவற்றை மாற்றி வேண்டுமென்றே திரித்து படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி.. அதன்மூலம் வசூலை பெறும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

இந்தக் கூத்தெல்லாம் சாதி இரண்டொழிய வேறில்லை என்று முழங்கிய பாரதி பிறந்த இந்த தமிழ்நாட்டில் தான் நடந்து கொண்டிருக்கிறது. மட்டுமில்லாமல் இப்படியான படங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளும் இன்று இருக்கின்றது.

இந்த காலகட்டத்தில், என் படத்தில் வரக்கூடிய ஒரு காட்சி ஒரு சிலரை காயப்படுத்தும் விதமாக இந்த விடக்கூடாது என்பதால் அந்த படத்தை இந்த காட்சியை என் படத்தில் வைக்காதீர்கள் என்று கணித்து.. பொறுப்புடன் செயல்பட்ட நடிகர் அஜித்துக்கு பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும். அதுதான் நிஜமான ஒரு சினிமா ரசிகன் ஒரு கலைஞனுக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version