” கடுகு சிறுத்தாலும் காடு கொள்ளாது..!” குட்டியூண்டு ஓமம் – த்துக்குள் இவ்வளவு நன்மைகளா?..!

 சீரகத்தைப் போலவே ஓமத்திக்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளது. குறிப்பாக சுவாசம் மண்டலத்தில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நோய்களையும் தடுக்கக்கூடிய அற்புத ஆற்றல் கொண்ட ஓமம் ஆனது சளி முதல் ஆஸ்துமா வரை குணப்படுத்தக் கூடியது. அதுமட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை இந்த ஓமம் வழங்கி வருகிறது.

 இனிமேல் அஜீரணக் கோளாறு உங்களுக்கு ஏற்பட்டு விட்டால் ஜெலுசில்லையோ அல்லது இனோவையோ தேடி குடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

 உங்கள் வீட்டில் எப்போதும் ஓமத்தை 100 கிராம் அளவு வாங்கி வைத்திருந்தால் இந்த அஜீரணக் கோளாறு நீங்கள் எளிதில் சரி செய்ய முடியும். ஓமத்தை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்து குடிக்கலாம் அல்லது வாணலியில்  லேசாக வறுத்து நீரினை விட்டு இளம் சூட்டில் பருகுவதின் மூலம் நீங்கள் உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

 பொதுவாக குளிர் காலங்களில் அடிக்கடி அஜீரண பிரச்சனை ஏற்படும் அவர்கள் இந்த இயற்கை வழியை பயன்படுத்தி உங்கள் ஜீரணக் கோளாறை சரி செய்து செரிமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

 வயிற்றில் இருக்கும் புண்களை சரியாக கூடிய ஆற்றல்மிக்க ஓமம் சிறுநீர் கழிக்கும் பாதையில் ஏற்படக்கூடிய தொற்றுக்களை அழிக்கவும் உதவி செய்கிறது. ஓமத்தை விதையாகவும் ஓம வாட்டர் ஆகவும் நீங்கள் வாங்கி வைத்து பயன்படுத்துவதன் மூலம் நன்மைகளை எளிதில் பெற முடியும். இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவது இல்லை.

 ஓமத்தில் அதிக அளவு நியாசின், தையமின், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி முதல் உபாதைகளை சரி செய்து உடலை தூய்மைப்படுத்த உதவி செய்கிறது.

 கை குழந்தைகள் இருக்கும் வீட்டில் அருமருந்தாக திகழும் இந்த ஓமத்தை குழந்தைகளுக்கு ஓம வாட்டர் ஆக கொடுக்கும் பழக்கத்தை நீங்கள் மேற்கொண்டால்  உட்வாட்ஸ் ஐ ஓரம் கட்டக்கூடிய அளவு இது நன்மைகளை குழந்தைகளுக்கு கொடுக்கும்.

மேலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை எளிதில் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

 இதற்குக் காரணம் இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி இன்பளமேட்டரி, ஆன்ட்டி ஆக்சிடென்ட், ஆன்ட்டி மைக்ரோபியல், ஆன்ட்டி ஹைபர்டென்சிவ் போன்றவை  நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய வல்லமையை உடலுக்கு கொடுக்கும்.

 மேலும் இதில் இருக்கக்கூடிய என்சைம் செரிமானத்தை தூண்டுவதோடு கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார் சத்துக்கள், புரதங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருவதோடு அற்புதமான ஆற்றலையும் கொடுக்கிறது.

 எனவே கட்டாயம் வீட்டில் ஓமத்தை உங்களது அஞ்சலரைப் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள் இதன் மூலம் எண்ணற்ற பலனை நீங்கள் பெறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version