இது வேற மாறி அப்டேட்..! அஜித் 62 படத்தில் வில்லன் யாருன்னு பாருங்க..! – எகிறிய எதிர்பார்ப்பு..!

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் புதிய இயக்குனருடன் தன்னுடைய 62-வது படத்தை நடிக்க இருக்கிறார். முன்னதாக நேர்கொண்டபார்வை வலிமை மற்றும் துணிவு என தொடர்ந்து மூன்று படங்களை இயக்குனர் ஹெச்.வினோத்திற்கு கொடுத்திருந்தார்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த படத்தை நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன. முன்னதாக இந்த படத்தில் நடிக்கக் கூடிய நடிகர்களின் விவரங்கள் இணையத்தில் அன்றாடம் வெளியாகிய வண்ணம்.

அந்த வகையில், தற்போது இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிகர் அரவிந்த்சாமி நடித்த இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றிருக்கின்றன.

அதிலும் நடிகர் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடித்த இருக்கும் தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள். மேலும், இந்த படத்தில் காமெடியனாக இல்லாமல் படத்தின் கதையோடு பயணிக்கக் கூடிய முக்கியமான கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.
Tamizhakam