அம்மாடியோவ்..! – ஒரு Back Bag-ன் விலை இவ்ளோ ரூபாயா..? – கவனம் ஈர்த்த 2.0 பக்‌ஷி ராஜா அக்‌ஷய் குமார்..!

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ( Akshay Kumar ) இவருடைய உண்மையான பெயர் ராஜு ஹரி எப்படந்த 1967 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தவர் இவர் இவருடைய தந்தை ஒரு ராணுவ அதிகாரி ஆவார். இளம் வயதில் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார் அக்ஷய் குமார். குத்துச்சண்டை வீரராகவும் வளர்ந்தார்.

Akshay Kumar Back Bag

டெல்லியில் வாழ்ந்த இவர் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றார். இதனால் மும்பைக்கு குடி பெயர்ந்தார். கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு 1991 ஆம் ஆண்டு சௌகாந்த் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து வரிசையாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

Akshay Kumar Back Bag

இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படத்தில் பக்சி ராஜனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவர் வில்லன் என விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், படத்தில் ப்பா.. என்ன மனுஷன்யா..! என்று கூறும் அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் மிகவும் நல்ல விதமாகவே காட்டப்பட்டிருந்தது.

Akshay Kumar Back Bag

படத்தில் சொல்லிக் கொள்ளும்படி வில்லன் இல்லாததால் இந்த படம் ரசிகர்களை கவர தவறியது என்று தான் கூற வேண்டும். ஒரு நல்ல மனிதரை எந்திரன் பழிவாங்குவது போல திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. இது கதையில் ஒரு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

எனவே இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறாமல் தரை தட்டி நின்றது. அதன் பிறகு எந்த தமிழ் படங்களில் நடிக்கவில்லை. 2.0 திரைப்படமே இவருடைய முதலும் கடைசி தமிழ் படமாக அமைந்திருக்கிறது.

Akshay Kumar Back Bag

தற்போது ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் அக்ஷய்குமார் சமீபத்தில் பொதுவெளியில் தோன்றினார். அப்பொழுது அவர் அணிந்திருந்த Back Bag அங்கிருந்து அவர்களின் கவனத்தை ஈர்த்தது மற்றும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

காரணம் இவருடைய Back Bag-கில் இரண்டு எல்இடி திரைகள் இருக்கின்றன. அதில் கண்கள் போன்ற அமைப்பு இருக்கிறது. அந்த கண்கள் அங்கும் இங்கும் உருட்டியபடி காட்சியளிக்கிறது.

Akshay Kumar Back Bag

பார்ப்பதற்கு புது விதமாகவும், அதே நேரம் கண்ணை கவரும் விதமாகவும் இருக்கும் இந்த பேக்கை பார்த்த ரசிகர்கள் இது என்னப்பா பேக் என வியந்தார்கள்.

இந்நிலையில், இந்த பேக் 35 ஆயிரம் ரூபாய் விலை கொண்டது என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. ஒரு Back Bag விலை 35 ஆயிரம் ரூபாயாம். இதனை அறிந்த ரசிகர்கள்,  எங்களுடைய மாத சம்பளம் கூட இவ்வளவு கிடையாது என புலம்பி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *