இன்னொரு பெண்ணின் கண்ணீரில் தன் வீட்டில் விளக்கேற்றும் சுனைனா..! கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் திரைப்படம் என்பதால் காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு அதிகமான விளம்பரம் இருந்தது.

அதனாலேயே அந்த திரைப்படத்தில் அதிக வரவேற்பை பெற்றார் சுனைனா தொடர்ந்து மாசிலாமணி திரைப்படத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வம்சம், திருத்தணி, நீர் பறவை, சமர் மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சுனைனா.

தமிழில் வரவேற்பு:

தொடர்ந்து வரவேற்பு பெற்று வந்த சுனைனா ஒரு கட்டத்திற்கு பிறகு வரவேற்பை இழக்க துவங்கினார். அதற்குப் பிறகு சில வெப் சீரிஸ் களிலும் முயற்சி செய்ய தொடங்கினார். இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நிலா நிலா ஓடி வா என்கிற வெப்சீரிஸில் ரத்த காட்டேரியாக நடித்திருந்தார்.

அந்த சீரியஸ்க்கு ஓரளவு வரவேற்பு கிடைத்திருந்தாலும் கூட அதற்குப் பிறகு அது தொடர்ச்சியாக செல்லவில்லை என்பதால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து நிறைய டிவி சீரியலில் நடித்து வருகிறார் சுனைனா. சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி வெப்சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் திருமணம் குறித்த விஷயங்கள்தான் சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. துபாயில் பிரபல யூட்யூபரான அல் அமீரி என்பவரைதான் தற்சமயம் காதலித்து வருகிறார் சுனைனா. இவர்கள் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

யூ ட்யூப்பரோடு காதல்:

அல் அமீரிதான் நடிகையை கடைபிடிக்கும் முதல் யூ ட்யூப்பர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு நடுவே சில சர்ச்சைகளும் இருந்து வருகின்றன. அல் அமீரி இதற்கு முன்பு காலித் என்கிற பெண்ணை திருமணம் செய்து அவருடன் 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து இருக்கின்றனர். பிரிந்த நான்கு மாதங்களிலேயே சுனைனாவை கரம் பிடித்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த அவரது மனைவி மிகவும் எமோஷனலாக பேசி சில வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அவை தான் தற்சமயம் அதிக வைரலாகி வருகின்றன. மேலும் சுனைனா தன்னுடைய குடும்பத்தை கெடுத்து விட்டதாகவும் அதனால்தான் தன்னுடைய கணவர் தன்னை விட்டு விலகியதாகவும் கூறுகிறார் காலித். நேரடியாக அப்படி கூறவில்லை என்றாலும் அப்படி கமெண்ட் செய்த சிலருக்கு அவர் லைக் செய்திருக்கிறார்.

காலித் வாங்கி கொடுத்த பிறந்தநாள் பரிசான கேமராவை வைத்து தான் அல் அமீரி இவ்வளவு பெரிய யூடியூப்பராக மாறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் கடைசியில் தனது மனைவியை கைவிட்டு விட்டு நடிகை சுனைனாவை திருமணம் செய்யவிருக்கிறார் அல் அமீரி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version