தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 41 வயதாகியும் தனது மார்க்கெட் குறையாமல் இன்னும் நம்பர் ஒன் நடிகையாகவே இருந்து வருகிறார்.
நடிகை திரிஷா:
இதனிடையே சில ஆண்டுகள் மார்க்கெட் இழந்து சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் . பின்னர் மீண்டும் 96 திரைப்படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்து திரிஷா தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
தற்போது அஜித், விஜய், கமலஹாசன் என தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஹீரோக்களோட ஜோடி போட்டு நடித்து வருகிறார் .
தற்போது கமல்ஹாசனின் தக்லைஃப் திரைப்படம் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது .
முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தில் அனுராதா என்ற ஒரு சிறிய கேரக்டரில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
பின்னர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் 2022 ஆம் ஆண்டில் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ச்சியாக அவருக்கு பல்வேறு வெற்றி திரைப்படங்கள் கிடைக்க அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்த முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
இதனிடையே நடிகை திரிஷா நடிகர் ராணா உள்ளிட்ட நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். மேலும் தொழிலதிபர் வருண்மணியன் என்பவருடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது .
வருண் மணியன் உடன் திருமணம் ரத்து:
விரைவில் இவர்கள் திருமணம் செய்த கொள்ளப் போகிறார்கள் என செய்திகள் வெளியான நிலையில் திடீரென அந்த திருமணம் நின்றுபோனது .
அதற்கான காரணம் வருண்மணியன் திரிஷாவுக்கு சில பல கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் திருமணத்திற்கு பிறகு நடிக்கவே கூடாது என கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் திரிஷாவின் தீவிர ரசிகை என்று கூறப்படும் ஏ எல் சூர்யா சமீப நாட்களாக திரிஷாவை குறித்தும் பல சர்ச்சையான மற்றும் அதிர்ச்சியான தகவல்களை கூறி வந்தார்.
மேலும் திரிஷா என்னுடைய மனைவி, திரிஷா விஜய்யுடன் நடிக்கவே கூடாது என்றெல்லாம் உரிமை எடுத்துப் பேசி வந்தது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது.
திரிஷாவால் பலகோடி ஏமாற்றப்பட்டேன்:
ஆனால் திரிஷா அதற்கு எந்தவிதமான மறுப்பு பதிலியோ தெரிவிக்கவே இல்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஏ. எல் சூர்யா, இறைவன் திரிஷாவை வைத்து அந்த கர்மாவை ஏன் செய்தான் என்று எனக்கு தெரியவில்லை.
திரிஷாவால் பல கோடி ஏமாற்றப்பட்டேன் என வருண்மணியன் கூறி புலம்புகிறார். என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றப்பட்டு இருக்கேன்.
அப்படி என்ன வேலை செய்திருப்பார் திரிஷா என்று தெரியவில்லை இறைவனுக்குத் தான் தெரியும் இறைவனை யாராலும் ஏமாற்ற முடியுமா முடியாது என கூறினார் .
மேலும், திரிஷா உங்களுக்கு இனி வேண்டாமா என்று கேள்விக்கு… ச்சைக்! அம்மா அதை ஒரு பகுதியாக பயன்படுத்தி விட்டார் என்று சொல்லிவிட்டேன் இதுக்கு மேல என்ன இருக்கு?
பிறகு திரிஷா சிஎம் ஆவார் என சொன்னீர்களே என கேட்டதற்கு, அது இறைவனின் திருவடியால் திரிஷாவுடன் நட்பு வைத்துக் கொண்ட எல்லாருமே மிகப்பெரிய பிரச்சனைக்கு உள்ளாகுவார்கள்.
ஏன் அவருடன் நட்பு வைத்துக் கொண்டோம் என்று நினைக்கும் அளவுக்கு திரிஷா மிகப்பெரிய சம்பவத்தை செய்து விடுவார் என ஏ எல் சூர்யா பேசியிருக்கிறார். அவரின் இந்த ஏடா கூடுமான பேச்சு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.