கணவர் மடியில் இப்படி உக்காந்து தான் போடுவேன்..! – அடம் பிடிக்கும் ஆலியா பட்..!

நடிகை ஆலியா பட் தன்னுடைய வளைகாப்பு நிகழ்வில் தன்னுடைய கணவர் மடியில் உக்காந்து கொண்டு தான் வளையல் போட்டுக்கொள்வேன் என்று அடம் பிடித்துள்ளார். பாலிவுட் பட உலகில் மிக முக்கியமான தயாரிப்பாளராக திகழும் மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி  ரஸ்தான் மகள்தான் ஆலியா பட்.

இவர் பாலிவுட் படங்களில் முன்னணி நாயகியாக திகழக்கூடிய ஆலியா பட் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

 குழந்தையாக இருக்கும்போதே குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆலியா 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளிவந்த “ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்” என்ற படத்தின் மூலம் ஹீரோயினியான அறிமுகமானார்.

 இதனை தொடர்ந்து இவர் நடித்த “டு ஸ்டேட்ஸ்”, “ஹைவே” போன்ற படங்கள் பாலிவுட்டில் மக்களின் பெரும் கவனத்தைப் பெற்றது. அதன் காரணமாக இவர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நாயகி என்ற அந்தஸ்தை அடைந்தார்.

 சமீபத்தில் இவர் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டு இருக்கக்கூடிய படமான “ஆர் ஆர் ஆர்”, படத்திலும் “டார்லிங்”, “பிரம்மாஸ்திரா” போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது தனது கணவரான ரன்வீர் சிங்குடன் “ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி” படத்திலும் நடித்து வருகிறார்.

 இதை தொடர்ந்து இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் போது செய்யப்படும் வளைகாப்பு நிகழ்வு மிகவும் கோலாகலமாக ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் வீட்டில் நடந்திருக்கிறது. இந்த வளைகாப்புக்கு குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு   சீரும் சிறப்புமாக நடத்தியிருக்கிறார்கள்.

மேலும் வளைகாப்பில் இவரது சகோதரிகளான ஷாஹீன், பூஜா மற்றும் அத்தை டினா  கலந்து கொண்டிருக்கிறார். அதுபோலவே ரன்பீர் குடும்பத்தைச் சார்ந்த  அம்மா நீது மற்றும் சகோதரி ரித்திமா  கலந்துகொண்டு ஆலியா பட்டுக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை மிகச்சிறப்பாக செய்தார்கள்.

 இந்த நிகழ்வில் வளையல் அணிவிக்கும் போது  எடுத்த போட்டோக்கள் அனைத்தும் தற்போது வலைதளத்தில் உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஆலியா பட் சிறந்த முறையில் குழந்தையை பெற்றெடுத்த தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …