தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிகமான வரவேற்பை பெற்ற ஒரு நடிகையென்றால் அது நயன்தாரா.தான் கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகைகள் வரவேற்பை பெற்று சினிமாவிற்குள் வந்திருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் எல்லோருக்கும் பெரும் வரவேற்பு என்பது கிடைத்தது கிடையாது ஆனால் நயன்தாராவிற்கு சினிமாவிற்கு வந்தது முதலே நிறைய வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன.
அது அவரது அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலும் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் இருக்கும் திரைப்படங்களாகதான் நடித்து வருவார்.
புகழ்ப்பெற்ற நடிகை:
ஏனெனில் அப்பொழுதுதான் மக்கள் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரமாக நயன்தாராவின் கதாபாத்திரம் இருக்கும். அப்படி நயன்தாரா நடித்து வந்ததனால் தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர்கள் நயன்தாராவோடு நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
அப்படி இருந்தும் கூட ஒரு தெலுங்கு நடிகர் நயன்தாராவுடன் எந்த காலத்திலும் நடிக்க மாட்டேன் என்று முடிவாக இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. புஷ்பா திரைப்படத்தின் மூலமாக இந்திய அளவில் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுன் தான்.
அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய நடிகர் என்று கூறலாம் அவர் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படியிருந்தும் அல்லு அர்ஜுன் ஏன் நயன்தாராவோடு மட்டும் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் என பார்க்கும் பொழுது அதற்கு சம்பந்தமான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது.
அல்லு அர்ஜூனின் வன்மம்:
நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியான பொழுது அது நயன்தாராவிற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் நயன்தாரா. அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்த போது அதில் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த விருதை வழங்குவதற்கு அல்லு அர்ஜுனை தான் அழைத்திருந்தனர். ஆனால் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன்தான் என்று கூறிய நயன்தாரா விக்னேஷ் சிவனை அழைத்து அந்த விருதை விக்னேஷ் சிவன் கையில் இருந்து பெற்று இருக்கிறார்.
இதனால் மேடையிலேயே அவமானப்பட்டு இருக்கிறார் அல்லு அர்ஜுன் அப்பொழுது முதலே அவருக்கு நயன்தாரா மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து இனி நயன்தாராவோடு நடிக்க மாட்டேன் என்று முடிவு செய்து இருக்கிறார் அல்லு அர்ஜுன். அதனை தொடர்ந்து ஏழு வருடங்கள் ஆன பிறகும் கூட இப்பொழுது வரை நயன்தாராவோடு ஒரு திரைப்படத்தில் கூட அல்லு அர்ஜுன் நடித்தது கிடையாது.