ரஷ்ய மொழியில் வெளிவர இருக்கும் நம்ம அல்லு அர்ஜுன், புஷ்பா திரைப்படத்தின் அமக்களமான டிரைலர் வெளியீடு…!!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க சுகுமார் இயக்கத்தில் வெளியிட்டார்கள்.

 கடந்த வருடம் வெளிவந்த இந்த படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.இதனை அடுத்து தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிட்டார்கள்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்ற இந்த படம் வசூலை வாரி தந்ததோடு இதில் நடித்த நடிகர்களுக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இதனை அடுத்து இந்தப் படத்தை தற்போது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்து அங்கு வரும் டிசம்பர் எட்டாம் தேதி வெளியிட இந்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. மேலும் டிசம்பர் ஒன்றில் மாஸ்கோவிலும் டிசம்பர் மூன்றில் செயினா பீட்டர்பார்க்கிலும் இந்த படத்தின் பிரீமியர் காட்சிகள் நடைபெற உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

 இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் ரஷ்யா சென்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் படக்குழுவை சார்ந்த சிலரும் மேலும் முக்கிய கலைஞர்களும் ரஷ்யா செல்ல இருக்கிறார்கள்.

 இந்த சூழ்நிலையில் ரஷ்ய மொழியில் புஷ்பா படத்தின் டிரைலர் YouTube இல் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய படங்களை இந்திய மொழிகளில் மட்டுமே இதுவரை பார்த்து வந்தவர்களுக்கு ரஷ்ய மொழியில் புஷ்பா டிரைலர் பார்ப்பது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

அதுபோல இந்திய மொழிகளில் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தின் வசன உச்சரிப்பு வித்தியாசமாக இருந்ததைப் போலவே ரஷ்ய மொழியிலும் டப்பிங் வித்தியாசமான முறையில் செய்யப்பட்டு இருக்கிறது.

இதனால் புஷ்பா படம் அங்கும் வசூலை அள்ளி குவிக்குமா என்று வரயிருக்க கூடிய நாட்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

எனினும் ரஷ்ய மக்கள் விரும்பக்கூடிய நாயகர்களின் வரிசையில் அல்லு அர்ஜுன் இடம் பெருவாரா? என்பதை தற்போதைய ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ரஷ்யாவில் வெற்றி பெற அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அவர்களுக்கு தற்போதைய ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …