” முடி உதிர்தல்… வறட்சியான முடிக்கு பை பை சொல்ல வேண்டுமா? ” – தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் கற்றாழை ஜெல் ஹேர் மாஸ்க்…!

பொதுவாகவே பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் தலைமுடி மிக நேர்த்தியான முறையில் வளர்வதற்காக எண்ணற்ற பொருட்களை அன்றாட வாழ்க்கையில் அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். நீங்கள் அடர்த்தியான அழகான தலைமுடியை பெற விரும்பினால் அதற்கு கட்டாயம் நீங்கள் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். இந்த கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதின் மூலம் உங்கள் கூந்தல் பள பள என பார்ப்பவர்களின்  மனதை அலை பாய வைத்து விடும்.

அப்படிப்பட்ட இயற்கையான கற்றாழை ஜெல்லை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கற்றாழை நெல்லி ஹேர் மாஸ்க்:

 ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்யில் நீங்கள் நெல்லிக்காய் சாறை சேர்த்து சேர்க்க வேண்டும். இதன் பிறகு இதை நன்கு கலந்து விட்டு உங்கள் வேர்க்கால்கள் வரை நன்கு ஊடுருவிச் செல்லும் வண்ணம் தலைமுடியில் தேய்க்க வேண்டும்.

 அப்படி தேய்ப்பதால் தான் இதை ஹேர் மாஸ்க் என்று கூறுகிறோம். இவ்வாறு செய்வதின் மூலம் தலை முடியில் இருக்கும் வறட்சியை நீங்குவதோடு தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு சரியான தீர்வாக அமையும்.

மேலும் இந்த கலவையை நீங்கள் உங்கள் கைகளால் எடுத்து நன்கு அழுத்தம் கொடுத்து தலையில் தேய்த்து விடுங்கள். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இந்த கலவை அப்படியே உங்கள் தலைமுடிகளில் இருக்க வேண்டும்.

 இதன் பிறகு நீங்கள் தலையை இளம் சூட்டில் இருக்கும் நீரில் அலசி விட வேண்டும் இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்வதின் மூலம் உங்கள் கூந்தலில் வளர்ச்சி ஏற்படும்.

 நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் தலைமுடி வளர்ச்சியை தூண்டி விடுவதோடு தலைமுடி உதிர்வையும் தடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 கற்றாழை வெந்தய ஹேர் மாஸ்க்

கற்றாழை ஜெல் உடன் ஊறவைத்து அரைத்த வெந்தயத்தை சேர்த்தால் கற்றாழை வெந்தய ஹேர் மாஸ்க் ரெடி. இதனை உங்கள் முடிக்கு தேவையான பளபளப்பை கொடுக்கும்.மேற்கூறிய ஹேர் மாஸ்க் போல உங்கள் தலைகளில் நன்கு தேய்த்து விடவும். தேய்த்து குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அப்படியே இருக்கவும்.

 அதன் பிறகு உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரில் அலாச வேண்டும் நீங்கள் இவ்வாறு செய்வதின் மூலம் உங்கள் முடி உதிர்வு தடுக்கப்பட்டு கூடுதலாக முடி வளர்ச்சி ஏற்படும்.

 மேலும் வெந்தயம் உங்கள் மேனியில் இருக்கும் உடல் வெப்பநிலையை சரியான முறையில் பராமரித்து குளிர்ச்சியை ஏற்படுத்தித் தரும்.

 எனவே இந்த இரண்டு ஹேர் பாக்குகளையும் பயன்படுத்தி உங்கள் முடிவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் கட்டாய பலன் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …