“கூந்தல் பிரச்சனைகளுக்கு பை பை சொல்ல..!” – இனி கற்றாழை ஜெல் பொடி ஒன்று போதும்..!

தங்கள் சரும அழகையும், கூந்தல் அழகையும் பராமரிக்க பிரஸ்சாக கற்றாழை கிடைக்கவில்லையே என்று கவலைப்படக்கூடிய நபர்கள் இனி கடைகளில் கிடைக்க கூடிய கற்றாழை ஜெல் பொடியை பயன்படுத்தி உங்கள் அழகை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம்.

குறிப்பாக கற்றாழை பொடியை கொண்டு நீங்கள் உங்கள் தலைமுடிக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கற்றாழை ஜெல் பொடியால் கிடைக்கும் நன்மைகள்

கடைகளில் கிடைக்கக்கூடிய இந்த கற்றாழை ஜெல் பொடிகளிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது உங்கள் உச்சந்தலையில் இருக்கக்கூடிய இறந்த சரும செல்களை நீக்கி புதிதாக முடிகள் முளைக்க உறுதுணையாக இருக்கிறது.

இந்த கற்றாழை ஜெல்லில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கொலஜன், பீட்டா கரோட்டின் போன்றவை அதிகளவு உள்ளதால் இது கூந்தல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.

கற்றாழை ஜெல் பொடியானது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முடியின் வேர்கால்களில் தூண்டுதல்களை ஏற்படுத்துவதின் மூலம் புதிதாக முடிகள் முளைப்பதற்கான தூண்டுதல் இதன் மூலம் கிடைக்கிறது.

தலையில் ஏற்படக்கூடிய ஒவ்வாமையை நீக்கக்கூடிய ஆற்றல் இந்த கற்றாழை ஜெல் பொடிக்கு உள்ளது. மேலும் இது உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமம் மற்றும் உச்சந் தலையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடை செய்கிறது.

முடி உதிர்வை தடுத்து கூந்தல் வறட்சியை தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த பொருளுக்கு உள்ளதால் இது ஒரு சிறந்த கண்டிஷனராக திகழ்கிறது. அதுமட்டுமல்லாமல் பொடுகினை நீக்கக்கூடிய அற்புத திறன் படைத்ததாக கற்றாழை ஜெல் திகழ்கிறது.

உச்சந்தலைகளில் ஏற்படுகின்ற தொற்றுக்களான செபொர்ஹெக் டெர்மடிடிஸ் என்ற தொற்று நோயை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த கற்றாழை ஜெல் பொடிக்கு உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே கற்றாழை ஜெல் உங்களுக்கு பிரஸ்சாக கிடைக்கவில்லை என்ற கவலை இனிமேல் தேவையில்லை. இந்த கற்றாழை ஜெல் பொடியை நீங்கள் வாரத்திற்கு இருமுறையோ ஒரு முறையோ பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக இது அமையும் என்பதை புரிந்து கொண்டு உடனடியாக இந்த குறிப்புக்களை நீங்கள் ஃபாலோ செய்து உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …