“நிறைய கடன் இருக்கு.. ஆனா.. இதுக்கு சம்மதிச்சது கிடையாது..” ஆல்யா மானசா சொன்னதை கேட்டீங்களா..?

டிவி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் நடித்து, மக்களின் மனதில் இடம்பிடித்தார். இப்போது சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ். இவரும் சீரியல் நடிகர்தான். ராஜா ராணி சீரியலில் சஞ்சீவ், ஆல்யா மானசா இருவரும் ஒன்றாக நடித்த போது ஏற்பட்ட நட்பு, ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஆல்யா மானசா

ஆல்யா மானசா போல, நீங்கள் நிறைய சம்பாதிக்க வேண்டுமா, அப்படி என்றால் இந்த லிங்க் ஐ கிளிக் செய்து உள்ளே சென்று பாருங்கள் என்று, அவரது பெயரை பயன்படுத்தி, மோசடி கும்பல் ஒன்று சமீபத்தில் ஒரு வதந்தியை பரப்பி வருகிறது.

இதுகுறித்து அறிந்த நடிகை ஆல்யா மானசா சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதுபற்றி அவரிடம் விசாரித்த போது நடந்த உண்மைகளை சொல்லி இருக்கிறார்.

நிறைய கடன் இருக்கு…

சன்டிவியில் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில், ஒரு வருஷத்துக்கு முன்னாடி விருந்தினராக நான் கலந்துக்கிட்டேன்.

அப்போ நான், அந்த நிகழ்ச்சியில் பேசும்போது நான் எம்எல்எம் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கிறதாகவும், அந்த மாதிரி நீங்களும் சம்பாதிங்கன்னு நான் சொன்ன மாதிரியும் ஒரு நாளிதழில் செய்தி வந்த மாதிரி காட்டியிருக்காங்க.

ஆனா, அந்த நிகழ்ச்சியில் நான் அப்படி எதுவுமே பேசலை. இப்பவும் நான் கார், வீடு வாங்கினாலும் எல்லாமே கடன்தான். மாசாமாசம் இஎம்ஐ கட்டீட்டு இருக்கேன். கடன் வாங்குற சக்தி இருக்கு. கடனை வாங்குறேன். திரும்பி கட்டறேன். இப்பவும் கடன் போயிட்டு இருக்கு. எல்லாத்துக்கும் ரெக்கார்டு இருக்கு.

என்னை தப்பா நினைக்கறாங்க…

குறுக்கு வழியில் சம்பாதிச்சு கோடீஸ்வரி ஆகனும் அப்படீங்கற எண்ணம், என் ரத்தத்துல இல்லே. அதனால தால் அந்த பத்திரிகை செய்தி குறித்து புகார் தந்தேன். அந்த பத்திரிகை லே அவுட் பார்த்தாலே அது போலின்னு தெளிவா தெரியும்.

சமீபத்துல நான் வெளிநாடு போயிருந்தேன். அப்போ என்னோட ஆர்ட்டிஸ்ட் பிரண்ட் போன் பண்ணியிருந்தாங்க. அப்போ நான் எடுத்து பேச முடியலை.

இங்க வந்த பிறகு, போன் பண்ணி கேட்டப்ப அவங்க எனக்கு இதுபத்தி எச்சரிக்க போன் பண்ணல. அந்த செய்தி உண்மைன்னு நம்பி, அதே மாதிரி பணம் சம்பாதிக்க என்கிட்ட அந்த விவரம் கேட்க போன் பண்ணியிருக்காங்க.

குறிப்பிட்ட லிங்கை கிளிக் செஞ்சப்போ, வெளிநாட்டுக்காரர் ஒருவர் பேசியதாகவும், குறிப்பிட்ட தொகையை அவர் கட்ட சொன்னதாகவும், அந்த பணத்தை கட்டலாமா என்றும் என்னிடம் கேட்டார்.

இந்த மாதிரி என்கூட பழகுன என் நண்பர்களே, என்னை பத்தி இப்படி தப்பா நினைக்கும்போது மத்தவங்களும் அப்படித்தானே இந்த போலியான வதந்தியை நம்புவாங்க. இந்த விளம்பரத்தை பார்த்து எத்தனை பேர் ஏமாந்தாங்களோ தெரியலை.

குறுக்கு வழியில்…

என்னுடைய புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறுபடியும் போலீஸ்கிட்ட பேசலாமுன்னு இருக்கேன்.

எனக்கு நிறைய கடன் இருக்கு.. உண்மைதான் ஆனா.. இப்படி குறுக்கு வழியில் சம்பாதிக்க சம்மதிச்சது கிடையாது.. என்று மிக தெளிவாக ஆல்யா மானசா சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version