“பழி வாங்கியே தீரனும்.. ஆரம்பத்தில் இருந்தே..” விவாகரத்து செய்தி குறித்து ஆல்யா மானசா ஒரே போடு..!

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகையர் மட்டுமே பெரிய அளவில் கொண்டாடப்பட்டனர். ஆனால் இப்போது அப்படியல்ல. சின்னத்திரை நடிகர், நடிகைகளும் மிகவும் ரசிக்கப்படுகின்றனர். மதிக்கப்படுகின்றனர்.

அதனால் சீரியல்களில் நடித்த இன்று செலிபரட்டிகளாக தமிழ்நாட்டுக்குள் வலம் வருகின்றனர். குறிப்பாக டிவி சீரியல்கள், கேம் ஷோக்கள், இசை நிகழ்ச்சிகள், டாக் ஷோக்கள் என எதில் கலந்துக்கொண்டாலும் அது அவர்களது முக்கிய அடையாளமாகி விடுகிறது.

சினிமாவில் தொடர்ந்து சில படங்களில் நடிக்கும்போது ஒரு நடிகர், ஒரு நடிகை என்ற நிலையை கடந்து, ஒரு ஆணும் பெண்ணுமாக பழகி காதலர்களாக மாறுகின்றனர். ஒரு கட்டத்தில் திருமணமும் செய்துக்கொண்டு நிஜ வாழ்க்கையிலும் இணைந்து விடுகின்றனர்.

சீரியல் ஜோடி…

அதுபோல் டிவி சீரியல்களில் நடிப்பவர்களும் தொடர்ந்து மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து ஒன்றாக நடிக்கும்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக்கொள்கின்றனர்.

தமிழ் சீரியல் நடிகர், நடிகைகளில் பல ஜோடிகள் அப்படி இணைந்திருக்கின்றனர். கணவன் மனைவியாக இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆல்யா மானசா

அப்படி விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் ஒன்றாக நடித்த போது சஞ்சீவ் – ஆல்யா மானசா இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இப்போது அவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இப்போது ஆல்யா மானசா, சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். அதே போல் சஞ்சீவ், அதே சன் டிவியில் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

அடிக்கடி கலை நிகழ்ச்சிகளில், பொது நிகழ்ச்சிகளில் செலிபரட்டிகளாக ஆல்யா மானசா, சஞ்சீவ் பங்கேற்று வருகின்றனர். அதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன.

இருவரும் விவாகரத்து…

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஆல்யா மானசா கூறுகையில், நாங்கள் இருவரும் விவாகரத்து செய்துக்கொள்ள போகிறோம் என்ற செய்தி வரும்போது எல்லாம் நாங்கள் இருவரும் சிரித்துக்கொண்டு தான் இருப்போம். பெரிதாக எந்த ரியாக்சனும் கொடுப்பது இல்லை.

பழி வாங்க வேண்டும்…

அதுபோல் கூடவே இருந்து, சிலர் ஏமாற்றுவதை பார்த்து நான் ஆரம்பத்தில் கோபப்பட்டேன். அவர்களை பழிவாங்க வேண்டும் என்றால் அப்போது நினைப்பேன். இப்போது அதுபோன்ற எண்ணமே இல்லை, என்று கூறியுள்ளார்.

கூடவே இருந்து ஏமாற்றுபவர்களை பழி வாங்கியே தீரனும் என்று ஆரம்பத்தில் நினைத்த ஆல்யா மானசா, இப்போது அந்த எண்ணமெல்லாம் விட்டுவிட்டு, விவாகரத்து செய்தி குறித்தும் சிரித்துக்கொள்வதாக ஒரே போடு போட்டு விட்டார். எல்லாம் காலம் தந்த பக்குவம்தான் என்கிறாரோ?

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version