பச்ச உடம்பு.. அதை கையில வச்சிகிட்டு தண்ணியில பண்ற வேலையா இது..? தீயாய் பரவும் அமலா பால் காட்சி..!

ஓணம் பண்டிகை கேரளா முழுவதும்.. மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகை அமலா பால் ஓண கொண்டாட்டங்களில் ஈடுபட்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்களின் மத்தியில் பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் கைக்குழந்தைய கையில வச்சுக்கிட்டு பண்ணுற வேலையா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

நடிகை அமலா பால்..

நடிகை அமலாபால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.

அந்த வகையில் இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதனை அடுத்து நடிகர் விஜயின் தலைவா படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

மேலும் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் விக்ரம் தனுஷ் சூர்யா போன்ற நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இவர் இயக்குனர் ஏஎல் விஜய் திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து பிரிந்து விட்டார். அதனை அடுத்து இவர் பற்றி பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கர்ப்பமான இவர் கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார் அந்த குழந்தைக்கு இலை என்ற பெயரை வைத்திருக்கிறார்.

ஓணம் ஸ்பெஷல் ஃபோட்டோஸ்..

சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் அமலபால் தற்போது ஓணம் பண்டிகையை ஒட்டி தன் கணவரோடு இணைந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் தன் கணவரோடு ரொமான்ஸ் செய்யக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்குக் காரணம் கையில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு லிப் லாக் முத்தத்தை தனது கணவருக்கு கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இதை பார்த்து வரும் ரசிகர்கள் திருமணம் ஆகி ஒரு குழந்தை பெற்ற பிறகும் அந்த ஆசை அடங்கவில்லையா? என்று பல்வேறு வகையான கேள்விகளை கேட்டு இருப்பதோடு ஓணத்திற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

லட்டு மாதிரி இருக்கும் இலை..

மேலும் இந்த புகைப்படத்தில் தனது மகனுக்கு ட்ரெடிஷனல் வேட்டியை கட்டி பக்குவமாக பிடித்திருக்கிறார். இதில் குழந்தை இலை பார்ப்பதற்கு லட்டு மாதிரி இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சிலர் வருங்கால ஹீரோவை இப்படி அழகாக காட்டியிருக்கும் அமலா பாலை பாராட்டி வருவதோடு குழந்தை இலைக்கும் முதல் ஓண வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படங்களை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version