பிரபல நடிகருக்கு நாக்கு முத்தம் கொடுத்த அமலா பால் – தீயாய் பரவும் வீடியோ..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் அமலா பால் ( Amala Paul ). கேரளாவை சேர்ந்தனர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தமிழில், பிரபு சாலமன் இயக்கிய மைனா இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படம். தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2, ராட்சசன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆடை, பொய்யாட்டம், குட்டி ஸ்டோரி போன்ற பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதில், ஆடை படத்தில், மிக வித்யாசமான கதைக்களத்தில் பல காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தது பலத்த பாராட்டை பெற்றது.

Image Source : Unkown

அமலா பால், மலையாளத்தில், நீலத்தாமரா என்ற படத்தில், துணை நடிகையாக 2009ல் அறிமுகம் ஆனார். தமிழில், 2010ல் வெளியான மைனா படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகை என, தமிழக அரசு விருது பெற்றார். பிரபல தயாரிப்பாளர் ஏ. அழகப்பன் மகன், இயக்குநர் ஏ.எல் விஜயை திருமணம் செய்த அவர், சில ஆண்டுகளில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார். ஆனால், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

Image Source : Unkown

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஆடுஜீவிதம் என்ற படத்தின் ட்ரெய்லரில் பிரித்விராஜூக்கு, அமலா பால் லிப்லாக் முத்தம் கொடுத்திருப்பது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில், ஆடுஜீவிதம் படம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு, ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். மிக வித்யாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில், அடையாம் தெரியாத அளவுக்கு வித்யாசமான கெட்டப்பில், நடித்து வருகிறார்.

இந்த படத்தில்தான், இந்த சூடான உதட்டு முத்தம் சம்பவம் நடந்திருக்கிறது. ஆடையின்றி நடிப்பது போன்ற வித்யாசமான கதைக்களத்தில் அமலா பால் நடிப்பது வழக்கம்தான் என்பதால், முத்தக்காட்சியும் மிக சாதாரணமாக எடுத்து நடித்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், பிரித்விராஜ், முத்தக்காட்சியில் நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தருகிறது. இதற்கு முன்பு பிரம்மம் படத்திலும், ஹீரோயினாக நடித்த ராசிக்கண்ணாவுடன் லிப்லாக் முத்தக் காட்சியில் நெருக்கம் காட்டி நடித்திருந்தார். இப்படி, முத்தக்காட்சிகளில் ஹாலிவுட் படம் அளவுக்கு, நம்ம நடிகர்களே புகுந்து விளையாடுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்து வருகிறது.

Image Source : Unkown

முதலில் உதட்டு முத்தக்காட்சியில் அதிக பேமஸ் ஆனவர் நடிகர் கமல்ஹாசன் மட்டுமே, அந்த வரிசையில் இப்போது பிருத்விராஜூம் வந்து விட்டார். ஆனால், ஆடுஜீவிதம் படத்தில் மிக வித்யாசமான கதைக்களத்தில், தன் முழு நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தி நடித்து வரும் பிருத்விராஜூக்கு இந்த படம் தேசிய விருது பெற்று தரும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …