சும்மா அதிருதுல்ல.. நிறைமாத வயிறு.. பெல்லி டான்ஸ் ஆடும் அமலா பால்.. அதிரும் இண்டர்நெட்..!

2009 ஆம் ஆண்டு நீலத்தாமரா என்கிற மலையாள திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். அந்த முதல் படம் மட்டும்தான் அவருக்கு மலையாள படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அதிகம் தமிழ் திரைப்படங்களாகதான் இருந்தன. வீரசேகரன் என்கிற திரைப்படத்தில் 2010 ஆம் ஆண்டு நடித்தார் அமலா பால்.

அதே வருடம் அவரது நடிப்பில் சிந்து சமவெளி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் அதிகமான சர்ச்சைக்கு உள்ளானது இந்த திரைப்படம் மூலமாகதான் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக அறிமுகமானார்.

தமிழில் வெற்றி:

அதனை தொடர்ந்து அதுவரை அமலாபால் நடித்த திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தது. முதன் முதலாக இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்து வெளியான திரைப்படம் மைனா. இந்த திரைப்படம் பெருமளவில் வெற்றி கண்ட ஒரு படமாக அமைந்தது.

அமலா பாலை பிறகு பேட்டிகளில் கேட்டால் கூட அவரது முதல் படம் மைனா என்றுதான் கூறினார். தமிழில் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரத் துவங்கின. 2011 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் தெய்வத்திருமகள் திரைப்படம் வெளியானது.

அந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும் கூட அதுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது. தொடர்ந்து வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி? முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற அவரது திரைப்படங்கள் எல்லாம் பயங்கரமான வெற்றியை பெற்றுக் கொடுத்தன.

விஜய்யுடன் வாய்ப்பு:

2013 ஆம் ஆண்டு முதன்முதலாக பெரும் நடிகரான விஜய்யுடன் சேர்த்து தலைவா திரைப்படத்தில் நடிகை அமலாபால் நடித்தார். பிறகு அந்த திரைப்படத்தின் இயக்குனரான ஏ.எல் விஜய்யுடன் அவருக்கு காதல் ஏற்பட்டதை அடுத்து அவரை திருமணம் செய்து கொண்டார் அமலா பால்.

ஆனால் சில வருடங்களில் திரும்ப அவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து உண்டானது. இருந்தும் தமிழில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் அமலா பால். 2019 ஆம் ஆண்டு அவர் நடித்த ஆடை திரைப்படம் பெரும் சர்ச்சைக்குரிய திரைப்படமாக அமைந்தது.

அந்த திரைப்படம் முழுக்கவே ஆடையில்லாமல் நடித்திருந்தார் அமலா பால். இருந்தாலும் அதை ஆபாசமாக காட்டாமல் நாகரிகமாகவே காட்டியிருந்தார் படத்தின் இயக்குனர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆடு ஜீவிதம். மலையாளம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலேயே நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம்.

இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால் அவர் கர்ப்பமானது முதலே தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று அதிக வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version