நடிகை அமலாபால் அறிமுகமான திரைப்படம் சிந்து சமவெளி என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடிகை அமலாபாலையின் முதல் திரைப்படம் வீரசேகரன் என்ற படம் தான்.
இந்த படத்தில் தான் நடிகை அமலாபால் ஹீரோயினாக அறிமுகமானார் இந்த திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதமே வெளியானது. ஆனால், சிந்து சமவெளி திரைப்படம் 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் வெளியானது.
இருந்தாலும் பலரும் நடிகை அமலாபாலின் முதல் திரைப்படம் சிந்து சமவெளி என்றும் இன்னும் ஒரு படி மேலே போய் மைனா தான் நடிகை அமலாபாலின் முதல் திரைப்படம் என்றும் கூறி வருகின்றனர்.
வீரசேகரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தரை தட்டி நின்றது. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு படம் வெளியானதா..? என்று கூட ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தன்னுடைய முதல் படத்தை சிந்து சமவெளி என அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை அமலா பால்.
ஏனென்றால் சிந்து சமவெளி திரைப்படம் கடும் சர்ச்சைக்குள்ளான ஒரு கதைக்களம். பள்ளியில் படிக்கும் பொழுது பள்ளி நண்பரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் மாணவியாக நடித்திருந்தார் நடிகை அமலா பால்.
தன்னுடைய காதல் கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த மாமனார் உடன் தகாத உறவில் இருப்பது போன்ற கதைக்களம். இந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.
நடிகை அமலா பாலின் பெயரும் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. ஆனால், இதனை எல்லாம் ஓரங்கட்டி விட்டு அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்றார்.
முதல் திரைப்படத்தில் நடிக்க கேரளாவிலிருந்து நடிகை அமலா பால் வந்த கதையை கேட்டாலே உங்களுக்கு சிரிப்பு வரும். என்னவென்றால் நடிகை அமலாபால் கேரளாவில் இருந்து சென்னைக்கு பேருந்திலேயே வந்திருக்கிறார்.
அவருக்கு ஒரு டிரெயின் டிக்கெட் கூட போட்டு கொடுக்கப்படவில்லை. பேருந்திலேயே 18 மணி நேரம் பயணம் செய்து சென்னை வந்து அடைந்திருக்கிறார் நடிகை அமலாபால். கோயம்பேட்டிற்கு வந்த நடிகை அமலாபால் அங்கிருந்து ஆட்டோவில் படப்பிடிப்பு தளத்திற்கு தன்னுடைய தாயுடன் வந்திருக்கிறார்.
இப்படித்தான் இவருடைய சினிமா வாழ்க்கை தொடங்கியது. ஆனால் கோடிகளில் சம்பளம் பெரும் உச்சநடிகையாகும் அளவுக்கு உயர்ந்தார். இடையில், தலைவா திரைப்படத்தில் நடிக்கும் போது ஏ.எல்.விஜய்-உடன் காதல் வயப்பட்ட நடிகை அமலா பால் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறி திருமண வாழ்க்கைக்குள் பிரவேசமான நடிகை அமலாபால் ஒரு கட்டத்தில் ஆடிய காலம் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார்.
உச்சகட்டமாக நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் படு நெருக்கமான காட்சிகளில் நடித்து தன்னுடைய புகுந்த வீட்டில் மிகப் பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய வீட்டிற்கு செல்லாத அளவுக்கு அமலாபாலின் அடிமையாக இருந்திருக்கிறார். இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் அமலாபால் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அமலா பால் எச்சரித்தார் என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
இதனை அமலா பாலோ.. தனுஷோ.. ரஜினிகாந்தோ மறுக்கவும் வில்லை. மாறாக தனுஷ்-ன் விவாகரத்து தான் அரங்கேறியது. மிகப்பெரிய விஷயமான இந்த விஷயத்தை மூன்று பேருமே கண்டு கொள்ளவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் அமலாபாலை எச்சரித்தார் காரணத்தினால் தான் ரஜினிகாந்த் அவர்களை சினிமாவில் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வழங்கப்படுவது கிடையாது. அறிவிக்கப்படாத ரெட் கார்டு அமலா பாலுக்கு போடப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள் ஒரு தரப்பினர் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்துள்ளார் பிரபல சினிமா ரிப்போர்டர் செய்யார் பாலு.
ஆனால், இது குறித்து உண்மை தன்மை என்ன என்று தெரியவில்லை. திரைப்படங்களில் அப்பாவியாக நடிக்கும் தனுஷ் காட்டிய சில்மிஷம் நடிகை அமலாபாலின் திருமண வாழ்க்கையே நாசம் செய்து விட்டது என்று கூறுகிறார்கள் என்று மூன்று முணுமுணுக்கிறார்கள் கோடம்பாக்க கோடாங்கிகள்.