ஆம வடை செய்யலாம் வாங்க…

இந்தியாவில் பெரும்பாலும் அதிக விற்பனை செய்யப்படும் குறுந்தீனி பொருள் என்று கூறலாம். இந்த வடையில் மிகுந்த சத்துகள் காணப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு கால நிலையிலும் உன்னை ஏற்ற உகந்த உணவாக உள்ளது.

அரிசி வடை, உளுந்து வடை, போண்டா வடை, மசாலா வடை,முப்பருப்பு வடை இது போன்ற வகைகள் நிறைய உள்ளது. எனினும் ஆம வடைக்கென்று ஒரு தனி சுவை காணப்படுகிறது. இந்த வடையை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த வடையை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஆம வடை செய்ய தேவையான பொருள்கள்

கடலைப் பருப்பு 250 கிராம் பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன் பெரிய வெங்காயம் கால் கிலோ 

பச்சை மிளகாய் 6 முதல் 8 வரை 

உப்பு 

எண்ணெய் 

கறிவேப்பிலை தேவைக்கேற்ப.

செய்முறை 

கடலைப்பருப்பை குறைந்தது மூன்று மணி நேரமாவது நனைத்து கழிந்து ஒரு வடிவத்தில் தட்டி நீரை நன்றாக வடித்து கொண்டு கால் மணி நேரம் ஊற விடுங்கள்.

ஊறிய கடலைப்பருப்பை நன்கு களைந்து விட்டு சிறிதளவு பெருஞ்சீரகம் போட்டு தண்ணீர் சேர்க்காமல் முக்கால் பாகமாக நன்கு ஆட்டி பொடியாக நறுக்கி வைத்திருக்கக்கூடிய வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, மல்லி ஆகியவற்றை  போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை சிறிதளவு உருட்டி வாணலியில் உள்ள எண்ணெய்யை காய வைத்து மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் தட்டி அழுத்தி ஒரு சிறிய ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் நேரமாகவோ சிவப்புடன் வரும்போது நீங்கள் எடுத்தால் சுவையாக இருக்கும் கடலைப் பருப்புக்கு பதிலாக நீங்கள் பட்டாணி பருப்பையும் உபயோகித்து இது மாதிரியான உடையில் சுட்டுக் கொள்ளலாம்.

பச்சை மிளகாய்க்கு பதில் மிளகு  சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். பெருமாளுக்கு படைக்கும் ஆம வடையில் பச்சைமிளகாய் சேர்க்கமாட்டார்கள்.

இப்போது நீங்கள் விரும்பி சுவைக்கக் கூடிய சூடான சுவையான ஆம வடை தயாராக உள்ளது சுவைத்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …