யாரு வெண்ண.. நீ மனுஷனா மொதல்ல.. அமீரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!

பொது இடங்களில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட தமிழ் சினிமாத்துறை சார்ந்தவர்கள் பேசும்போது, வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

குறிப்பாக மீடியாக்கள் முன்னிலையில் சில விஷயங்களை கூறும் போது பல விமர்சனங்களை தாங்கிய கேள்விகள் வரவே செய்யும். அது போன்ற நேரங்களில் தேவையின்றி கோபப்படுவதால் அது மேலும் மேலும் மீடியாக்களில் வைரலாகி, அவர்கள் பெயரை இன்னும் டேமேஜ் ஆக்கும்.

இது ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கு, பெரிய இயக்குனர்களுக்கு கூட நடந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

உயிர் தமிழுக்கு

ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்ட்டி இந்தியன் படத்தைத் தொடர்ந்து, மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்த படம், உயிர் தமிழுக்கு. இந்த படத்தின் மூலம் ஆதம்பாவா இயக்குனராகி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

அமீர்

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள உயிர் தமிழுக்கு படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்துள்ளார். ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர் ராஜ சிம்மன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 10ம் தேதிவெளியானது.

பயில்வான் ரங்கநாதன்

இந்நிலையில் இயக்குனர் அமீர் குறித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது,

இயக்குனர் அமீர் உயிர் தமிழுக்கு என்ற படத்தில் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அமீர் பத்திரிகையாளர்களை போடா வெண்ண என்று திட்டினார். நல்லவேளையாக அந்த சந்திப்பில் நான் இல்லை, இருந்திருந்தால் நான் குரல் கொடுத்து இருப்பேன்.

போடா வெண்ண

யாருப்பா வெண்ணை, வெண்ணை ஆகாத பொருளா, பிரியாணியில் வெண்ணை இருக்காதே என்று எல்லாம் கேட்டு அவரை கேள்வி கேட்டிருப்பேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமீர் திணறியிருப்பார்.

உயிர் தமிழுக்கு என்று எடுக்கப்பட்ட படத்தில், தமிழ்ச்செல்வி என்ற கதாநாயகியை தான், உயிர் தமிழுக்கு என்று படத்தில் சொல்லி இருக்கிறார். அதற்கு உயிர் தமிழ் செல்விக்கு என்று வைக்க வேண்டியதுதானே, உயிர் காதலிக்கு என்று சொல்ல வேண்டியது தானே, எதற்கு உயிர் தமிழுக்கு என்று பெயர் வைத்தார்கள்.

சமூக போராளி பட்டம்

இந்த படத்தில் அமீர்க்கு சமூக போராளி என்று பட்டம் தரப்பட்டுள்ளது. இந்த பட்டத்தை கொடுத்தது யார், உண்மையில் அவர் எந்த சமூகத்துக்காக போராடினார்.

அமீர் கொடுத்த அனைத்து பேட்டிகளிலும், நடிகர் சிவக்குமார் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறினார். தமிழ் சினிமாவிலேயே மிகவும் கண்ணியமானவர் சிவக்குமார்தான். அவர் ஆதரவு தரவில்லை என்றால் அமீரின் நடவடிக்கை சரியில்லை என்று தான் அர்த்தம்.

அகங்காரத்தில்…

நான்கு வெற்றி படங்களைஇயக்கி விட்டோம் என்று அகங்காரத்தில், திமிரின் உச்சியில் இருக்கிறீர்கள் என்று பயில்வான் ரங்கநாதன் அமீரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

யாரு வெண்ண.. நீ மனுஷனா மொதல்ல என்று கேள்வி கேட்டு இயக்குனர் அமீரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ செம வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version