அட.. ச்சைக்.. மாமனார் செய்ற வேலையா இது..? ஐஸ்வர்யா ராய் ரகசியத்தை கிழித்த பிரபல நடிகர்..!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனின் விவாகரத்து விவகாரம் தான் கடத்த சில நாட்களாகவே பாலிவுட் சினிமாவில் பெரும் செய்தியாக பேசப்பட்டு வருகிறது .

மேலும், இவர்களுக்கு விவாகரத்து ஆகும் அளவிற்கு குடும்பத்தில் பிரச்சனை நடந்திருக்கும்? ஏதேனும் தகாத உறவு இருந்திருக்க கூடுமா? என பல செய்திகள் வதந்தியாக வெளியாகி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது .

வெறுப்புடன் கட்டிவைத்த அமிதாப்:

குறிப்பாக ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்னதாக பிரபல நடிகர்களான விவேக் ஓபராய் மற்றும் சல்மான்கான் இவர்களுடன் நெருக்கமாக பல வருடம் காதலித்து வந்த ஐஸ்வர்யா ராய் அவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் அவர்களை பிரிந்து விட்டார்.

அதன் பிறகு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய் .விவகாரம் இப்படி இருக்கவே அமிதாப் பச்சனுக்கு ஐஸ்வர்யா ராய் தன் வீட்டு மருமகளாக சுத்தமாக விருப்பமே இல்லையாம்.

மகன் காதலித்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அமிதாபச்சன் எல்லாவற்றையும் மறந்து ஐஸ்வர்யாராயை தன் வீட்டு மருமகளாக்கிக் கொண்டார்.

அதன்பின் ராஜா வீட்டில் வாழும் ராணி போல ஐஸ்வர்யா ராய் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பணக்கார குடும்பத்தில் சகல வசதிகள் உடன் வாழ்ந்து வந்தார் . இவர்களுக்கு ஆரத்யா என்ற ஒரு மகளும் பிறந்தார்.

மகள் பிறப்புக்கு பின்னரும் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார் .இது எல்லோருக்கும் வாய்க்காது. திருமணத்திற்கு பிறகும் தனது லட்சியத்தையும் கனவையும் நிறைவேற்றிக் கொண்டு வந்தார் ஐஸ்வர்யா ராய்.

அம்பானி வீட்டு கல்யாணத்தில் அம்பலம்:

வாழ்க்கை இவ்வளவு அழகாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி அவரது ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்டதும் இந்த விவாகரத்தை உறுதி செய்த காரணமாகவும் பார்க்கப்பட்டது எது ? என்று கேட்டீர்களானால் அம்பானி வீட்டு திருமணம் தான்.

அந்த திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக வந்து கலந்து கொண்டார்.அதேபோல் அபிஷேக் பச்சன் தனது குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

இதுதான் இவர்களின் விவாகரத்தையும் உறுதி செய்தது. குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை இருந்தால் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனிமையில் வருவார்? அபிஷேக் பச்சன் அவரது குடும்பத்தினருடன் வந்திருக்கிறார் என பல செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். அவர் கூறியதாவது, ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சனுக்கு திருமணம் செய்து வைக்க அமிதாப்பச்சனுக்கு சுத்தமாக விருப்பமே இல்லை.

சொத்து பிரச்சனை தான் காரணம்:

விவேக் ஓபராய் , சல்மான் கான் போன்ற நடிகர்களுடன் உறவில் இருந்ததால் இவரை தன் மகனுக்கு கட்டி வைக்க விரும்பவில்லை .

ஆனால் மகனுக்காக இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார். இந்த நிலையில் விவாகரத்து பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது.

ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை பிரிய மிக முக்கிய காரணமாக இருப்பதே சொத்து பிரச்சனை தான். அமிதாப்பச்சன் மும்பையில் மிகப்பெரிய பணக்காரர்கள் வாழும் என்ற ஜுஹு பகுதியில் மிகப்பெரிய பங்களா வீடு சொந்தமாக வைத்திருந்தார் .

அந்த வீட்டை தனது மகன் ஸ்வேதா நந்தாவிற்கு எழுதி கொடுத்துவிட்டார். இதனால் ஐஸ்வர்யா ராய்க்கும் மாமனாருக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சண்டை காரணமாகத்தான் ஐஸ்வர்யா ராய் வீட்டில் இருந்தாலும் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்து வருகிறார் .

வெளியில் வரும் போதெல்லாம் தன் மகளுடன் தனிமையில் வந்து செல்கிறார். இது மட்டுமில்லாமல் அபிஷேகத்திற்கு வேறொரு நடிகை உடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது.

இதனால் குடும்பத்தில் மேலும் விரிசல் ஏற்பட்டு ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினரிடம் பிரிந்து தனியாக இருந்து வருவதாக கூறியுள்ளார் பயில்வான்.

என்னதான் இருந்தாலும் ஒரு மாமனார் இப்படி செய்யலாமா? குடும்பத்திலேயே மிகப்பெரிய பிரச்சனை உண்டாக்கக் கூடியது சொத்து பிரச்சனைதான்.

அவ்வளவு பெரிய பங்களா வீட்டை மகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டால் மருமகள் சும்மா இருப்பாரா?என விமர்சித்து தள்ளி இருக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version