“ஆயுள் கூடி ஆரோக்கியம வைக்கும் மலை நெல்லி மிட்டாய்..!” – எப்படி செய்வது பார்க்கலாமா..!

 இன்று வளர்ந்து வரும் தலைமுறைக்கு அதிகளவு எதிர்ப்பு சக்தியை இல்லை என்று கூறலாம். அந்த அளவு அடிக்கடி அவர்கள் நோய்களின் தாக்குதல்களுக்கு மிக விரைவில் ஆளாகி விடுவதோடு அந்த நோய் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள எண்ணற்ற ஆங்கில மருத்துவங்களை பின்பற்றுவதன் மூலம் பக்க விளைவுகளை அடைகிறார்கள்.

 இனி அவர்கள் இதுபோல நோய்களின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நீங்கள் மலை நெல்லிக்காயை அப்படியே சாப்பிட கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். எனவே அதை மிட்டாயாக செய்து தருவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைவதோடு ஆயுள் கூடி ஆரோக்கியமும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட மலை நெல்லிக்காய் மிட்டாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

 மலை நெல்லிக்காய் மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள்

1.ஒரு கிலோ மலை நெல்லி

2.அரை கிலோ நாட்டு சர்க்கரை

3.எலுமிச்சை சாறு

செய்முறை

நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒரு கிலோ மலை நெல்லியை நன்றாக கழுவி விட்டு இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக விடவும். இதனை அடுத்து இட்லி பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டு நீங்கள் மலைநெல்லியை லேசாக நசுக்கினால் உள் இருக்கக் கூடிய விதைகள் அப்படியே வெளியே வந்து விடும்.

 எனவே நீங்கள் விதைகளை நீக்கிய பிறகு துண்டு துண்டுகளாக மலை நெல்லிக்காய் நறுக்கி எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அதுவே துண்டுகளாக வந்து விடும்.

 இதனை அடுத்து நீங்கள் ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த நெல்லிக்காயோடு அரை கிலோ நாட்டு சக்கரையை  போட்டுவிட்டு அதனோடு ஒரு எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி அப்படியே மூடிவிடுங்கள்.

பிறகு இது நீர் விட்ட பிறகு அந்தத் தண்ணீரை வடித்து எடுத்து விடுங்கள். இதனை அடுத்து அடுப்பில் ஒரு சில நிமிடங்கள் இதை வைத்திருந்த பின்பு வெயிலில் அப்படியே போட்டு உலர்த்தி விடுங்கள்.

இது நன்றாக காய்ந்த பின் ஒரு டைட்டான பாட்டிலில் எடுத்து போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் மிட்டாய் சாப்பிட வேண்டும் என்று கேட்கும் போது தினமும் இதில் நான்கு துண்டுகள் கொடுத்து விடுங்கள்.

 இல்லையென்றால் பள்ளிக்கு கொடுத்து விடும் குறுந்தீனி டப்பாவில் கட்டாயம் நான்கு துண்டுகள் கொடுப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு ஆரோக்கியமும் கிடைக்கும்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …