கல்லை பார்த்தால் கூட தனுஷ் விடமாட்டார்..! அசுரன் படத்தில் மோசமான அனுபவம்..! அம்மு அபிராமி ஒரே போடு..!

அபிராமி ஐயங்கார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை அம்மு அபிராமி என்று மாற்றிக் கொண்டார் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவருக்கு ரசிகர்கள் அதிக அளவு இருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகை பொருத்தவரை தளபதி விஜய் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த பைரவா திரைப்படத்தில் மருத்துவ மாணவியாக 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் அறிமுகமானார்.

நடிகை அம்மு அபிராமி..

இதனை அடுத்து இவர் 2017 ஆம் ஆண்டு என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் நடித்த இவர் கார்த்தியோடு தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் துணை வேடத்தை ஏற்று நடித்திருந்தார்.

மேலும் 2018 ஆம் ஆண்டு ராட்சசன் படத்தில் நடித்த இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து 2019-ல் அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆனார்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் அண்மையில் வெளிவந்த ஹாட்ஸ்பாட் என்ற ஆத்தாலஜி படத்தில் நடித்திருந்தார் மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

இந்நிலையில் குக் வித் கோமாளி ஷோவை இயக்கிய பார்திவ் மணி என்பவரை தான் அம்மு அபிராமி காதலித்து வருவதாக சமீபத்தில் சொன்னதை அடுத்து அவர் காதலை உறுதி செய்திருப்பதாக நெட்ம்ஸ்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

ஒரு கல்ல பார்த்தா கூட தனுஷ் விடமாட்டார்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அம்மு அபிராமி ரசிகர்களை எப்போதும் தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையாலும் புதிய படங்களின் வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்திலும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

இதை அடுத்து இவர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்ப்பதற்கு என்றே ஓர் ரசிகற்படை காத்திருக்கும் அந்த வகையில் தற்போது நடிகை அம்மு அபிராமி நடிகர் தனுஷ் குறித்து சொன்ன விஷயம் பரபரப்பாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

அவர் தனுஷ் பற்றி என்ன கூறினார் என்று நீங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்றால் தொடர்ந்து இந்த பதிவை படித்தாலே போதும் அது என்ன விஷயம் என்பது உங்களுக்கு எளிதில் தெரிந்துவிடும்.

ஹீரோயினே வேண்டாம்..

சமீபத்தில் நடிகர் தனுஷ் குறித்து அம்மு அபிராமி பேட்டி ஒன்றில் கூறியுள்ள விஷயம் இணையத்தில் வைரலாகி ஆகி வருகின்றது. அதில் அவர் கூறியிருப்பதாவது, அசுரன் படத்தில் நடிகர் தனுசுடன் படத்தில் நடிக்க போகிறேன் என்று தெரியும். 

ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறேன் என்று எனக்கு தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்தாலே எனக்கு ஒரு விதமான பயமாக இருக்கும். அவரிடம் ரொமான்ஸ் செய்வது என்பது ஆரம்பத்தில் எனக்கு கடினமான விஷயமாக இருந்தது. 

ஆனால், தனுஷ் சார்க்கு அப்படி கிடையாது. ஒரு கல்லை காட்டி அதனுடன் நீங்கள் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று கூறினால்.. அது கல்தானே என்றெல்லாம் பார்க்க மாட்டார்.. 

மேலும் அதனுடன்  உருகி உருகி ரொமான்ஸ் செய்வார். அந்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் தனுஷ். ஆனால் நான் சிரமப்பட்டு அந்த படத்தில் நடித்து முடித்தேன் என கூறியுள்ளார் அம்மு அபிராமி.

இந்த விஷயம் தான் தற்போது இளசுகளின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …