“இது என் உடம்பு.. வேறு யாரையும் திருப்தி படுத்த இல்ல.. புரிஞ்சுக்கோங்க..” அம்மு அபிராமி அதிரடி..!

சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் நடிகையாக இருந்து வருகிறார் நடிகை அம்மு அபிராமி. இவர் தன்னுடைய 16 வது வயதிலேயே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார். விஜய் கதாநாயகனாக நடித்த பைரவா திரைப்படத்தில் முதன்முதலாக துணை கதாபாத்திரமாக அறிமுகமானார் நடிகை அம்மு அபிராமி.

அதற்கு பிறகு அவருக்கு நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் தங்கை கதாபாத்திரங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன. தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் மாதிரியான திரைப்படங்களில் நடித்த அம்மு அபிராமிக்கு ராட்சசன் திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அம்மு அபிராமி எண்ட்ரி:

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ராட்சசன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அம்மு அபிராமி. அந்த திரைப்படத்தில்தான் அவரது கதாபாத்திரத்தின் பெயர் அம்மு அபிராமி என்று இருந்தது.

பிறகு அதுவே அவருடைய பெயராக மாறி அம்மு அபிராமி என்று அழைக்கப்படுகிறார். தொடர்ந்து அசுரன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தார் அபிராமி. அதனை தொடர்ந்து அவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் சமீப காலமாக வர துவங்கியிருக்கின்றன.

கார்த்திக் கதாநாயகனாக நடித்த தம்பி மற்றும் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த யானை மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் துணை கதாபாத்திரங்களில் இவரை பார்க்க முடியும். சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக வாய்ப்பு:

ஹாட்ஸ்பாட் அனிதா என்கிற அந்த கதாபாத்திரம் அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட அதில் அம்முஅபிராமியின் சிறப்பான நடிப்பும் பாராட்டப்பட்டது. இதற்கு நடுவே குக் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பை பெற்றார்.

இந்த நிலையில் சமீபகாலமாக அம்மு அபிராமியின் உடல் எடை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அம்மு அபிராமி.

நிறைய பேர் என்னுடைய உடல் எடை கூடி விட்டது என்று கூறுகிறார்கள். ஆம் உண்மைதான் என்னுடைய உடல் எடை கூடிவிட்டது என்பது எனக்கு தெரியும் அதனை நான் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறேன். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதற்கும் ஆரோக்கியமாக வாழ்வை வாழ்வதற்குமான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன்.

என்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறேன். இவை அனைத்தும் என்னுடைய சொந்த விருப்பத்தில் என்னுடைய மகிழ்ச்சிக்காகத்தான் செய்கிறேனே தவிர வேறு யாருக்காகவோ அல்லது வேறு யாரையும் திருப்திபடுத்தவோ நான் செய்யவில்லை என்று அதிரடியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மு அபிராமி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version