“தாலியை கழட்டி வச்சிட்டு.. இன்னொருத்தன் கூட..” – திருமணம் குறித்து நடிகை அம்மு ராமச்சந்திரன் விளாசல்..!

இன்று திரை உலகில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் வாய் புளிப்போ, மாங்காய் புளிப்போ என்று சொல்லக் கூடிய வகையில் காலையில் திருமணம் செய்து கொண்டு மாலையில் விவாகரத்து என்ற ரீதியில் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அதற்கு மாற்றாக ஒரு கருத்தினை முன் வைத்து நடிகை அம்மு ராமச்சந்திரன் பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
இவர் திருமணம் பற்றி பேசுகையில் என்ன சொல்லி இருக்கிறார் என்பது பற்றிய விஷயங்களை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை அம்மு ராமச்சந்திரன்..

நடனக் கலைஞராகவும், மாடல் அழகியாகவும் திகழ்ந்த நடிகை அம்மு ராமச்சந்திரன் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து ஆரம்ப நாட்களில் இவர் கலர் பதம் என்ற மலையாள திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். அதனை அடுத்து மரிய தாய், மந்திரப்புன்னகை, ஒரு முதல் ஒரு காதல், சூறையாடல், சும்மாவே ஆடுவோம் போன்ற திரைப்படங்களில் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆயிரம் காலத்துப் பயிர்..

இவர் அண்மையில் திருமணம் பற்றிய தனது கருத்தை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த பேச்சானது தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பரவி வருகிறது.

திருமணம் இரு மனம் இணைந்து நடக்கக்கூடிய இந்த திருமணத்தை நமது முன்னோர்கள் ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது என்பது உங்களுக்கும் தெரியும்.

இன்றைய அவசர காலகட்டத்தில் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும், அவர்களாகவே முடிவு செய்து கொள்ளும் காதல் திருமணங்களும் நிலைத்து நிற்காமல் விவாகரத்தை விரைவில் பெற்று தனித்தனியாக வாழக்கூடிய சூழ்நிலைகள் அதிக அளவு உருவாகியுள்ளது.

இதற்கு பல்வேறு வகைகளில் காரணங்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், திருமண பந்தங்களில் ஈடுபட்டு இருக்கக்கூடியவர்கள் அதன் புனிதத்தை உணராமல் தற்போது அவர்களுக்குள் ஏற்படும் ஈகோவாலும் விட்டுக் கொடுக்க முடியாத தன்மையாலும் விரைவில் பிரிகிறார்கள்.

திருமணம் குறித்த பேச்சு..

இதனை அடுத்த தான் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து வரும் நம் நாட்டிலும் விவாகரத்துக்கள் அதிகளவு ஏற்படுகிறது என்ற உண்மையை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

எனவே திருமணம் பற்றி நடிகை அம்மு ராமச்சந்திரன் பேசும் போது திருமணம் என்பது என் வாழ்க்கையில் ஒரு முறை தான் நடக்க வேண்டும். அதுவும் கட்டாயத்தின் பேரில் ஒருவனை திருமணம் செய்து கொண்டு மூன்று மாதத்தில் தாலியை கழட்டி வைத்துவிட்டு இன்னொருவனுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்னால் முடியாது என்ற கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்து இருக்கிறார்.

மேலும் தன்னுடைய வாழ்க்கையில் அதற்கு இடமே கிடையாது. எனவே என் வாழ்க்கையில் ஒரு முறை தான் திருமணம் நடக்கும் அதுவும் ஒரே ஒரு முறை ஒருவருடன் மட்டுமே நடக்கும் என சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் நடிகை அம்மு ராமச்சந்திரனின் இந்த பேச்சு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

அடுத்து ரசிகர்கள் பலரும் இது போன்ற உறுதியான மனநிலையில் இருக்கக்கூடிய பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் போது கட்டாயம் அவர்கள் வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படாமல் விவாகரத்தும் நடக்காமல் இருக்கும். இந்த பாசிட்டிவான எண்ணமானது வரவேற்கத்தக்கது என்று கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version