டவுசரில் பார்த்துட்டு சேலையில் இவ்ளோ அழகா இருப்பிங்கனு நினைக்கல அமிர்தா ஐயர்

தமிழில் உச்ச நட்சத்திரமான விஜயுடன் நடித்ததன் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமிர்தா ஐயர். இவருக்கென தமிழில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இவர் கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் 1994 மே 14ஆம் தேதி பிறந்தவர்.

இவருக்கு தற்போது இருபத்தி எட்டு வயது ஆகிறது. இவர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற நடிகையாகும். அதன் பிறகு மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட நடிகை அமிர்தா ஐயர் அவர்கள் சில இயக்குனர்களிடம் துணை இயக்குனருக்கான வேலையை பார்த்து வந்தார்.

தமிழ்நாட்டில் பல விளம்பர படங்களில் நடித்து வந்த நடிகை அமிர்தா ஐயர் விளம்பர படத்துறைக்கு பின்னால் தொழில்நுட்ப வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். விளம்பரத்திற்கான டிசைனிலும் காஸ்டியூமிலும் வேலை செய்து வந்த நடிகை அமிர்தா இருக்கு சில திரைப்பட வாய்ப்புகள் வந்தது அவர் மிகச் சரியான திரைப்பட வாய்ப்புக்காக காத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் அட்லி அவர்களின் இயக்கத்தில் தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமான விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான திகில் திரைப்படத்தில் கால்பந்து அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதன் பின்பு இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இவர் பிகில் படத்தில் நடிப்பாரா இல்லையா என்ற சந்தேகத்தில் இந்த பின்பு பிகில் படத்தில் நடித்து முடித்தார்.

இந்த படம் தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஹிட் படமாக விஜய்க்கு மட்டுமல்லாமல் அட்லிக்கும் தென்றலாக நடித்த நடிகை அமிர்தா ஐயருக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு அமிர்தா இருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தாலும் அவர் சிலவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தார்.

இவருக்கு அந்த படத்திற்கு பிறகு திரைப்பட வாய்ப்புகள் மட்டுமல்லாது விளம்பர படத்திற்கான மாடலாக நடிக்கவும் பல நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தன. இந்த படத்திற்கு பிறகு வெளிவந்த 90 சதவீத விளம்பர படங்களில் அமிர்தா மாடலாக அந்த பொருட்களை புரமோட் செய்து கொடுத்தார்.

இவர் லிங்கா தெனாலிராமன் போக்கிரி ராஜா தெரிவி போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பிகில் படம் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.நடிகை அமிர்தா ஐயர் அவர்கள் 2018 வெளியான படைவீரன் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதை சில பத்திரிகைகள் அமிர்தா அவர்கள் தனது கதாபாத்திரத்தில் பொருத்தமாக பொருந்துகிறார் என்று பாராட்டி இருந்தது.

அதன் பிறகு 2018 ல் வெளியான காலி என்ற திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு இணையான கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் நடிகை அமிர்தா ஐயர் அவர்கள். 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரெட் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமானார் நடிகை அமிர்தா. இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் ஜிவி பிரகாஷ் ஆனந்த்ராஜ் ஆகியோருடன் இணைந்து முதலில் வெளியான வணக்கம் டா மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்திருக்கிறார் இந்த படம் இப்பொழுதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு கவிவுடன் இணைந்து லிப்ட் என்ற திரைப்படத்தின் நடித்த அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தனது instagram பக்கத்தில் அவ்வப்போது நடிகை அமிர்தா அவர்கள் சில புகைப்படங்களை வெளியிடுவார் அவை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் வெகுவாக பரப்பப்பட்டு வருகிறது. இதே போல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …