“இரண்டாம் காதலன் குறித்து மகன் கேட்ட அந்த கேள்வி..” அதிர்ந்து போன எமி ஜாக்சன்..

மதராசப்பட்டணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். ஆர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார்.

ஹாலிவுட் நடிகையான அவர் தொடர்ந்து ஐ, 2.0, தெறி, கெத்து, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

எமி ஜாக்சன்

சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன மிஷன் சேப்டர் 1 என்ற படத்தில், அருண் விஜயுடன் எமி ஜாக்சன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோ என்பவரை எமிஜாக்சன் காதலித்து, அவர் மூலம் ஒரு மகனுக்கும் தாயானார். ஆனால் ஒருகட்டத்தில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

எட் வெஸ்ட்விக்

இப்போது பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை, எமிஜாக்சன் காதலித்து வருகிறார். கடந்த இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட நிலையில், இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் எமி ஜாக்சன் பேசியுள்ளார்.

என் மகன் ஆண்ட்ரியாஸ்க்கு சின்ன வயதில் இருந்தே எட் வெஸ்ட்விக்கை நன்றாக தெரியும். அப்போது இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர்.

நல்ல பார்ட்டனராக…

எனக்கும், என் மகனுக்கும் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தில் நெருக்கமாக எட் வெஸ்ட்விக் இருப்பதாக எனக்கு தோன்றியதால்தான், நல்ல லைப் பார்ட்டனராக இருப்பார் என்று அவரை நான் காதலிக்கவே ஆரம்பித்தேன்.

இந்த சூழலில் ஒரு நாள் என் மகன் ஆண்ட்ரியாஸ் என்னிடம் வந்து, அம்மா நீங்க ஏன் கல்யாணம் செய்துக்கொள்ளவில்லை. எட் வெஸ்ட்விக்கை ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்டான்.

ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை…

என் அம்மாவை, நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று எட் வெஸ்ட்விக்கை நானே கேட்கப் போகிறேன், என்றான்.

எங்கள் காதலுக்கு என் மகன் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டான். அதன்பிறகு தான் நானும், வெஸ்ட்விக்கும் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம், என்று கூறியிருக்கிறார்.

கிரீன் சிக்னல்..

தனது இரண்டாம் காதலன் வெஸ்ட்விக் குறித்து, மகன் கேட்ட அந்த கேள்வியால் சற்று அதிர்ந்து போனாலும், மகனே தங்களது காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டியது எமி ஜாக்சனுக்கு பெரிய சந்தோஷத்தையே தந்திருக்கிறது என்பது அவரது முகத்தில் தெரிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version