ஆனைமலை தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா..!

 கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டத் திருவிழா மாசி மாதம் அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

 இங்கு சிவன் ராத்திரி அம்மாவாசை அன்று கொடியேற்றம் நடைபெறுகிறது இந்த கொடியேற்றம் சமயத்தில் கொடிக்கம்பத்தை ஆழி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்து அதன் பின் கோயிலுக்கு கொண்டு வந்து கொடி ஏற்றத்துடன் விழாவை ஆரம்பிப்பார்கள்.

 இதனை அடுத்து இந்த கோவிலில் எழுந்து அருளியிருக்கும் அம்மன் பிரசாதமாக பச்சரிசி மற்றும் மஞ்சள் கலந்த விபூதியை பக்தர்களுக்கு வழங்குவார்கள். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு நிறைய அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

 அதன் பின்னர் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கட்டப்படும். மேலும் கொடியேற்றம் ஆரம்பித்தவுடன் 18 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு தொடர்ந்து நடைபெறும்.

 இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் கொடி ஏற்ற சமயத்தில் கருடாழ்வார் பொரித்த உருவம் கொடிக்கம்பத்தில் கட்டப்படும் போது வானத்தில் கருடன் வட்டமிடுமாம். இதைப் பார்த்து பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் கண்ணனை வேண்டிய வண்ணம் இருப்பார்கள்.

 மேலும் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதனை அடுத்து கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு, குண்டத்து காட்டில் விஸ்வரூப தரிசனம் போன்றவை நடக்கும்.

 மேலும் அம்மன் உச்சவம்,அரவான் சிரசு போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த ஊரில் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து குண்டம் கட்டுதல் அலங்கார திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் பூகுண்டம் வளர்த்தல் ஆகியவை நடைபெறும்.

 கோவை மாவட்டத்து பக்தர்கள் மட்டுமல்லாமல் வேறு சில மாவட்டங்களில் இருந்தும் வெளி ஊர்களில் இருந்தும் இந்த குண்டத்தை காண்பதற்கு நிறைய பக்தர்கள் ஒன்று கூடுவார்கள்.

இரவு நேரத்தில் 60 அடி நீளமும் 11 அடி அகலமும் கொண்ட குண்டத்தில் பூ வளர்க்கப்பட்டு உத்தரவு கொடுக்கப்படும் பக்தர்கள் அந்த பூக்குழியில் இறங்கி வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி விடுவார்கள். இறுதியாக மஞ்சள் நீராடுதல் போர் மன்னன் காவு நிகழ்வும் நடைபெறும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …