கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடியில் பெரும் சிகரத்தை தொட்ட நடிகரான நாகேஷின் மகன்தான் நடிகர் ஆனந்த் பாபு. தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான ஆனந்த் பாபு, நான் பேச நினைப்பதெல்லாம், சேரன் பாண்டியன் மாதிரியான நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் பெரும் வெற்றியையும் கொடுத்தன. அதனை தொடர்ந்து கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்ற ஒரு நடிகராக ஆனந்த்பாபு இருந்தார். நாகேஷ் போலவே இவரும் தனிப்பட்ட நடனத் திறமையை கொண்டிருந்தார். பாட்டு பாடிக்கொண்டே வித்தியாசமாக நடனமாடும் அவரது திறமைக்கு அப்பொழுது அதிக வரவேற்பும் இருந்து வந்தது.
திரைத்துறையில் வாய்ப்பு:
இவரது நெருங்கிய நண்பரான கே.எஸ் ரவிக்குமார் அவருடைய புரியாத புதிர் திரைப்படத்திலிருந்து ஆனந்த் பாபுவிற்கு வாய்ப்புகளை கொடுத்து வந்து கொண்டிருந்தார்.
ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் நடிகர் ஆனந்த் பாபுவை காணவில்லை. இவர் 1985 ஆம் ஆண்டு சாந்தி என்கிற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு மூன்று ஆண் பிள்ளையும் ஒரு பெண் பிள்ளையும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆனந்த் பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால்தான் தமிழ் சினிமாவை விட்டு விலகி விட்டார் என்று கூறப்படுகிறது. அதிகமான குடி பழக்கத்திற்கு அடிமையான ஆனந்த் பாபு தொடர்ந்து மது அருந்துவதோடு இல்லாமல் அவரது தந்தை நாகேஷ் சேர்த்து வைத்த சொத்துக்களையும் அவரே அழித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
சினிமாவில் ரீ எண்ட்ரி:
இதனால் விரக்தி அடைந்த அவரது மனைவி சாந்தி விவாகரத்து கோரி அவரை விட்டு விலகி சென்று விட்டார். இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து உதவி செய்து வந்த கே.எஸ் ரவிக்குமார் திரும்பவும் அவருக்கு தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய ஆதவன் திரைப்படத்தில் ஆனந்த்பாபுவிற்கு வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார்.
அதன் மூலம் ஆனந்த் பாபு தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி ஆனார். பிறகு பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்த ஆனந்த்பாபு விஜய் டிவியில் மௌனராகம் எனும் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
மது போதைக்கு அடிமையாகி சொத்துக்களை அழித்த காரணத்தினால் ஆனந்த்பாபுவின் பிள்ளைகளே அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகுதான் நாடகங்களில் நடித்து அதன் மூலமாக வாழ்ந்து வருகிறார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.