நாகேஷ் மகன் ஆனந்த் பாபு.. மனைவி.. பிள்ளைகள் இழந்து நடுத்தெருவுக்கு வர காரணம் தெரியுமா..?

தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த காமெடியனாக திகழ்ந்த நாகேஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். இவரது நகைச்சுவை திறனுக்கும் நடிப்புக்கும் இந்த ஒரு கதாபாத்திரத்தையே நாம் உதாரணமாக சொல்லலாம்.

இவரின் மகன் ஆனந்த் பாபு மிக நல்ல நடனமாடும் திறமையோடு இருந்ததோடு, 1983 முதல் 1999 வரை பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக விளங்கியவர்.

நாகேஷ் மகன் ஆனந்த் பாபு..

தனது தந்தை ஒரு காமெடி நடிகர் என்பதால் திரை உலகிற்கு வருவதற்கு சிரமம் இல்லாமல் காலடி எடுத்து வைத்த நடிகர் ஆனந்த் பாபு 1983-ஆம் ஆண்டு பன்முக திறமை கொண்ட டி ராஜேந்திரரின் திரைப்படமான தங்கைக்கோர் கீதம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.

முதல் படமே இவருக்கு மிக நல்ல வெற்றியை தந்ததை அடுத்து அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் கடமை, புயல் கடந்த பூமி, நியாயம் கேட்கிறேன், பாடும் வானம்பாடி, வெற்றிகனி, உதயகீதம், பார்த்த ஞாபகம் இல்லையா, விஸ்வநாதன் வேலை வேண்டும், மௌனம் கலைகிறது, தாயா தாரமா, புரியாத புதிர், புதுவசந்தம், எதிர்காற்று, சிகரம் போன்ற படங்களில் மிகச்சிறப்பாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்.

இதனை அடுத்து 1991-ஆம் ஆண்டு வெளி வந்த சேரன் பாண்டியன் திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட ஆனந்த் பாபு இதய ஊஞ்சல், எம்ஜிஆர் நகரில், புத்தம் புது பயணம், அன்பு சங்கிலி, ஈஸ்வரி, நான் பேச நினைப்பதெல்லாம், என் இதயராணி, வாட்ச்மேன் வடிவேலு, சேரன் சோழன் பாண்டியன் போன்ற படங்களிலும் நடித்து அசத்தினார்.

மனைவி பிள்ளையை இழந்து..

தமிழ் திரை உலகில் உச்சகட்ட நடிகராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது பல தீய நண்பர்களை பெற்றார்.

இதன் விளைவாக இவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு மதுவுக்கு அடிமையாக கூடிய சூழ்நிலைக்கு சென்றார். அந்த வகையில் மதுவுக்கு அடிமையான இவர் குடிப்பழக்க வழக்கத்தால் திரை உலக வாழ்க்கையில் ஜொலிக்க முடியாமல் திணறினார்.

1985-ஆம் ஆண்டு சாந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரது இளைய மகன் கஜேஷ் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மதுவுக்கு அடிமையான ஆனந்த்பாபு அதிலிருந்து மீள முடியாமல் திணறியதை அடுத்து தனது மனைவியும் பிள்ளைகளையும் விட்டு விட்டு தனியாக வாழ்ந்தார்.

நடுத்தெருவுக்கு வர காரணம்..

நாளுக்கு நாள் நிலைமை மோசமாக திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்ததை அடுத்து போதைக்கு அடிமையான இவர் 2006-ஆம் ஆண்டு தனது மனைவியின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்தக் கெட்ட பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்தார்.

இதனை அடுத்து விஜய் டிவி சீரியல்களில் தலைகாட்டிய இவர் தற்போது அந்த தீய பழக்கத்தில் இருந்து வெளி வந்து குடும்பத்தோடு செட்டிலாகி இருக்கிறார். இவர் மட்டும் மது பழக்கத்திற்கு ஆளாகவில்லை என்றால் ரஜினி மற்றும் கமலுக்கு இணையான ஒரு இடத்தை தமிழ் திரைப்படங்களில் பெற்றிருப்பார்.

ஆனால் காலத்தின் கொடுமை மது போதைக்கு அடிமையான இவர் தனது அற்புத எதிர்காலத்தை இழந்து அடைந்த புகழ், பணம், சொத்து போன்றவற்றையும் தீய நட்புக்காக தொலைத்து இருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு நாகேஷ் மகன் ஆனந்த் பாபு மனைவி பிள்ளைகளை இழந்து நடுத்தெருவுக்கு வர காரணமே தீய மதுப்பழக்கம் தான் என்பதை ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version