பொன்னின் செல்வன் – ஆனந்த் மஹிந்த்ரா ட்வீட்..! – லைகா கொடுத்துள்ள பதிலை பாருங்க..!

 இந்திய திரையுலகமே ஆவலோடு காத்திருந்த மணிரத்தினத்தின் படமான பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அன்று வெளிவந்தது.

 பிரம்மாண்டமான முறையில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பார்ப்பதற்காக இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே எதிர்பார்த்துக் காத்திருந்தது.

 இந்த படத்தில் ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே  நடித்திருந்தது. இந்தப்படத்தில்  பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இந்தப் படம் பிரம்மாண்டமாக வரவேண்டும் என்பதற்கான கடின உழைப்பை போட்டிருக்கிறார்கள்.

 மாபெரும் சோழர்கள் வரலாற்றை மிக நேர்த்தியான முறையில் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றிருக்கக்கூடிய மணிரத்தினத்தின் பணியை பாராட்டியே ஆகவேண்டும்.

இந்த படம் வெளிவந்து ஏறக்குறைய மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் படம் பெருவாரியான வசூலை இந்தியாவில் மட்டுமல்லாமல் கனடா மற்றும் நியூயார்க்கில் குவித்திருக்கிறது.

 இதனையடுத்து மிகப் பிரபலமானவர்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான மகேந்திரா நிறுவனத்தின் உரிமையாளரான ஆனந்த் மகேந்திரா பொன்னியின் செல்வன் பற்றிய தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 அவர் தான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பற்றிய அதிக தகவல்களை மட்டுமே தெரிந்து வைத்துள்ள தலைமுறையைச் சேர்ந்தவன் என்றும்  மிகப்பெரிய சோழப் பேரரசு பற்றிய வரலாற்று நிகழ்வுகளை  தெரியாமல் இருந்ததற்கு இருந்ததற்கு வருந்துவதாகவும்  இந்தப் படத்தில் சோழர் சாம்ராஜ்யம் பற்றிய தகவல்களை ஆதாரப்பூர்வமாக மணிரத்தினம் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துவார் என்று காத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

 இதனைத் தொடர்ந்து இவரது கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக லைக்கா நிறுவனம் நிச்சயமாக உங்களுடைய ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த படம் அமையும் என்ற பதிலை அழைத்திருக்கிறார்கள்.

இப்போது இந்த  செய்தியானது மிகப்பெரிய அளவில் தாக்கத்தையும் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் ஏற்படுத்தியுள்ளதால் இதனை அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …