1980-களில் மிகச் சிறந்த வில்லத்தனமான கதாபாத்திரங்களை செய்து நடிகர் நம்பியாருக்கு இணையான பெயரையும், புகழையும் பெற்ற நடிகர் ஆனந்தராஜ் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து அசத்தியவர்.
ஆனந்தராஜ்..
இவர் 1988 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற படத்தில் திரை உலக பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து புலன் விசாரணை, பாலைவனப் பறவைகள், ராஜா கைய வச்சா போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த கேங் லீடர், காவல் நிலையம், மாநகர காவல் போன்ற படங்களில் மிரட்டலான வில்லத்தனத்தை காட்டி அனைவரையும் ஈர்த்து கொண்டவர்.
மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த கவர்மெண்ட் மாப்பிள்ளை, பரதன், கட்டளை, ஜல்லிக்கட்டு காளை, பாட்ஷா, மாமன் மகள், கட்டுமரக்காரன், புதிய ஆட்சி, அருவா வேலு, கிழக்கு முகம், செங்கோட்டை, சூரிய வம்சம், ஜானகிராம், அரசியல், மூவேந்தர், சிம்ம ராசி, பெரியண்ணா, வானத்தைப்போல போன்ற படங்கள் இவர் பெயர் சொல்லும்.அந்த வகையில் இவர் 2011 ஆம் ஆண்டு வெளி வந்த அகம் புறம் படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது என்றால் எவராலும் நம்ப முடியாது. அந்த அளவு இவர் மிகச்சிறப்பாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்த ஏழுமலை திரைப்படத்தில் வழக்கம் போல வில்லனாக களை கட்டிய இவர் இதில் பேசப்படும் வசனமான அட ங்கொப்பன் தாமிரபரணியில தலை முழுக..” என்ற வசனத்தின் அர்த்தம் என்ன..? என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?.
தாமிரபரணியில் தலை முழுக்க..
அட ங்கொப்பன் தாமிரபரணியில தலை முழுக..” என்ற வசனத்தின் அர்த்தம் என்ன..? என்பது தெரியாமல் தான் அந்த படத்தில் பல இடங்களில் பல நேரங்களில் இந்த வசனத்தை பேசி இருப்பார்.
இதை எடுத்து இந்த படத்தின் இயக்குனர் அர்ஜுனிடம் வசனத்தின் அர்த்தம் புரியவில்லை இதன் அர்த்தம் என்ன என்று ஒரு முறை கேட்டிருக்கிறார்.
இதனை அடுத்து இந்த வசனத்தின் அர்த்தம் புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று அர்ஜுன் கூறினார். மேலும் நிறைய இடங்களில் இந்த வசனத்தை நீக்கிவிட்டார். ஆனால் படம் வெளியான சில நாட்கள் கழித்து கர்நாடகாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்.
அப்போது அர்ஜுனை நடிகர் ஆனந்தராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சார் நீங்கள் கூறிய இந்த வசனத்தை ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். படத்துக்கு மிகப்பெரிய ரிச்சை இந்த வசனம் கொடுத்திருக்கிறது என்ற கருத்தை தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த வசனத்திற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால் உன்னுடைய தந்தை இருப்பதற்கு முன்பே நீ இறந்து விடுவாய்… அதனால் உன்னுடைய தந்தை தாமிரபரணியில் தலை முழுகுவார் என்ற உள் அர்த்தம் கொண்டது. இன்னும் இது தான் இந்த வசனத்தின் அர்த்தம் என்பது பலரும் அறியாத தகவல் தற்போது தெரிந்து விட்டது.
இதனைத் தொடர்ந்து எந்த அர்த்தத்தை தெரிவித்து தெரிந்து கொண்ட அனைவரும் இதற்கான அர்த்தம் இதுவா? என்று வெகுவாக அவர்களை பாராட்டி வருகிறார்கள்.