சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முந்தைய நாள்.. டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் வரல.. ஆனந்த் ராஜ் வெளியிட்ட பகீர் தகவல்..!

ஆந்திராவில் இருந்து தமிழ் திரை உலகில் நுழைந்து தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை மர்மம் நிறைந்ததாகவே இன்றும் உள்ளது.

இதற்கு காரணம் இவர் இறப்பு எதனால் நிகழ்ந்தது என்று இன்று வரை கண்டுபிடிக்க முடியாத புதிராகவே உள்ள நிலையில் இவர் பற்றிய சில விஷயங்கள் அண்மைக்காலமாக இணையங்களில் பல்வேறு வகைகளில் பரவி வருகிறது.

சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முந்தைய நாள்..

இதனை அடுத்து சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக மாற்றி சிலர் வெளியிட்டு இருக்கிறார்கள். எனினும் அவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் தான் அந்த படங்களில் முழுமையாக காட்டப்பட்டுள்ளதா? என்று கேட்டால் அது சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் நடிகர் ஆனந்தராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது டர்ட்டி பிக்சர்ஸ் படம் பார்த்தேன் அதில் சில்க் ஸ்மிதா குறித்து மிகப்பெரிய விஷயங்கள் எல்லாம் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படம் எடுப்பதற்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் நான் நிறைய கன்டென்ட் கொடுத்திருப்பேன். படமும் இன்னும் அருமையாக வந்திருக்கும் என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

அத்தோடு ஒன்றும் பிரச்சனை இல்லை சில விஷயங்களை நான் கூறுகிறேன். சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்பு முந்தைய நாள் நான் கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.

டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில்..

அந்தப் படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இருக்கிறது என்று கூறி சில்க் ஸ்மிதாவை நடனம் ஆட வைக்கலாமா என பட குழுவுடன் கூறிய நிலையில் அதற்கு ஒப்புதல் வாங்கி அதற்குண்டான சம்பள செக்கை சில்க் ஸ்மிதாவிடம் கொடுத்து விட்டேன்.

இவர் இறந்த தினத்தன்று அவருக்காக படப்பிடிப்பு எல்லாம் தயாராக இருக்கிறது. அனைத்து நடிகர்களும் தயாராக இருந்தார்கள். மேலும் நடனம் ஆட செட் தயார் செய்யப்பட்டு எல்லாமே தயாராக இருந்தது.

ஆனந்தராஜ் வெளியிட்ட பகிர்..

அந்த சமயத்தில் தான் சில்க் ஸ்மிதா இறந்துவிட்டார் என்ற தகவல் வெளி வருகிறது. இதனால் ஒட்டு மொத்த படக்குழுவும் திகைத்து நின்றார்கள். யாருக்குமே நாம் என்ன செய்கிறோம்.. நான் கேட்பது நிஜமா? என்று எதுவுமே தெரியவில்லை.

அப்படி ஒரு மோசமான நாளை தான் நான் சந்தித்தேன். என்னுடைய படத்தில் நடனமாட இருந்த நடிகை சில்க் ஸ்மிதா இறந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் யோசித்து கூட பார்க்க முடியவில்லை என நடிகர் ஆனந்தராஜ் பதிவு செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் நடிகர் ஆனந்தராஜ் மட்டுமல்லாமல் அவர் வாழ்வில் நடந்த பல விஷயங்களை டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் காட்டவில்லை. எனக்கு சில்க் ஸ்மிதாவை பற்றி நிறைய விஷயங்கள் தெரியும்.

ஏனென்றால் அவர் எனக்கு நெருங்கிய தோழியாக இருந்தார். எனவே பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் என நடிகர் ஆனந்தராஜ் பேசியிருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முந்தைய நாள் டார்ட்டி பிக்சர்ஸ் படத்தில் அவரது முழுமையான கதையும் வெளி வரவில்லை என்று ஆனந்தராஜ் சொன்ன விஷயம் பகிர் தகவலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version