தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிக பிரபலமாக இருந்த கவர்ச்சி நடிகைகளில் சில்க் ஸ்மிதாவும் முக்கியமானவர். இப்போது போல் இல்லாமல் அப்போதைய காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று தனியாக ஒரு மார்க்கெட் இருந்தது.
பெரும்பாலும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற கவர்ச்சி நடிகைகளுக்கு தொடர்ந்து படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வந்தது. ஒரு சில பாடல்களில் மட்டுமே வந்து ஆடினாலும் கூட அதற்கு அதிகமான தொகையை அவர்கள் சம்பளமாக பெற்றுக்கொள்வார்கள்.
கவர்ச்சி நடிகை மார்க்கெட்:
மேலும் ரஜினி கமல் மாதிரியான பெரிய நடிகர்கள் படங்களிலேயே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி இருந்த கவர்ச்சி நடிகைகளில் அதிக வரவேற்பு பெற்றவராக சில்க் ஸ்மிதா இறந்து வந்தார். விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட சில்க் ஸ்மிதா ஆந்திராவை சேர்ந்தவர் ஆவார்.
வறுமை காரணமாக வேலை தேடி அவர் தமிழ்நாட்டிற்கு வந்தார் அப்பொழுதுதான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்கலாம் என்று அவர் காத்திருந்தார். அந்த சமயத்தில் வினு சக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் முதன்முதலாக வாய்ப்பை பெற்றார் சில்க் ஸ்மிதா.
அந்த படத்தில் அவருடைய பெயர் சில்க் என்று இருந்ததால் பிறகு அதையே அவருடைய பெயராக மாற்றிக் கொண்டார். தமிழ் சினிமாவில் அப்பொழுது அறிமுகமாகி இருந்தாலும் அதன் பிறகு தென்னிந்தியா முழுவதும் அவர்களுக்கு வரவேற்பு என்பது கிடைக்க துவங்கியது.
முக்கிய இயக்குனர்:
சில்க் ஸ்மிதாவை வைத்து அதிகமாக திரைப்படம் இயக்கிய இயக்குனர்களில் பாலு மகேந்திரா முக்கியமானவர். தன்னுடைய திரைப்படங்களில் எப்பொழுதும் சில்க் ஸ்மிதாவை அவர் பேரழகியாக தான் காட்டி வந்திருக்கிறார்.
மேலும் அவர் படங்களில்தான் அதிகமாக வரவேற்பை பெற்றிருக்கிறார் சில்க் ஸ்மிதா. இப்படி தமிழ் சினிமாவை கலக்கி வந்த சில்க் ஸ்மிதா சில காலங்களுக்கு பிறகு தற்கொலை செய்து கொண்டார் அது அப்பொழுது திரைத்துறையினர் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருந்தது.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் ஆனந்தராஜ் ஒரு பேட்டியில் சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எனக்கு சில்க் ஸ்மிதா நல்ல தோழியாக இருந்தார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை டர்ட்டி பிக்சர் என்கிற ஒரு படமாக எடுத்தார்கள்.
அதனை பார்த்தேன். அதில் சில்க் பற்றி நிறைய விஷயங்களை கூறவே இல்லை அந்த படம் எடுப்பதற்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் நான் இன்னும் நிறைய விஷயங்களை கூறியிருப்பேன். சில்க் ஸ்மிதா இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் தான் நான் ஒரு கன்னட படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தேன்.
அந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இருப்பதாக கூறினார்கள். நான் உடனே அதில் சில்க் ஸ்மிதாவை ஆட வைக்கலாம் என்று பரிந்துரைத்தேன். அவர்களும் ஒப்புக்கொண்டு அதற்கான சம்பள செக்கையும் என்னிடம் கொடுத்தார்கள்.
ஆனால் அந்த பாடல் படமாக்கப்பட திட்டமிட்டிருந்த நாளில்தான் சில்க் ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது. அதனை கேட்டு பட குழு மொத்தமும் அதிர்ந்து போய் விட்டோம் பின்னர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டோம் என்று கூறுகிறார் ஆனந்தராஜ்.