பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அனுசுயா பரத்வாஜ் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தபோதும் கூட நான் தொகுப்பாளினி வேலையைத்தான் நேசிக்கிறேன் என்று கூறி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொடர்ந்து வந்தார்.
ஆனால் தற்போது திடீர் ஞானம் உண்டவர் போல திரைப்படங்களில் புயல் வேகத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மறு பக்கம் தன்னுடைய தொகுப்பாளினி வேலையையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தது போல இல்லாமல் தற்போது தொகுப்பாளினியாக தொடரும் போது படு கிளாமரான உடை அணிந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த வகையில், இவர் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் இவர் அணிந்திருந்த உடையை பார்த்து அதிர்ச்சியானார்.
என்ன இது..? குழந்தைகள் அதிகம் பார்க்கக் கூடிய அந்த நிகழ்ச்சியில் இப்படியான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு வருகிறீர்கள். இது தவறானது என்று கூறியிருந்தார். அப்போதைக்கு அமைதியாக இருந்தார் அனசுயா பரத்வாஜ்.
ஆனால், அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு தன்னுடைய இணையப் பக்கத்தில் இது என்னுடைய உடல் என்னுடைய என்னுடைய சுதந்திரம் நான் என்ன உடை அணிய வேண்டும் என்று மற்றவர்கள் எனக்கு சொல்லித் தர தேவையில்லை என்பது போன்ற காட்டமான பதில் கோட்டா சீனிவாசராவ் அதற்கு கொடுத்திருந்தார்.
மேலும் சமீபத்தில் இவரை ஆன்ட்டி என அழைத்து கருத்துக்களை வெளியிட்ட ரசிகர்களை நான் உங்கள் மீது போலீசில் புகார் தெரிவிப்பேன் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து இருக்கும் இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தன்னுடைய பாவாடையை தூக்கி தன் கணுக்காலை காட்டி ரசிகர்களின் சூட்டைக் கிளப்பும் விதமான ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் நடிகை அனசுயா பரதுவாஜ். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.