அன்பே சிவம் இப்போவும் உண்மை மறைக்க வேண்டிய தேவை இல்ல.. போட்டு உடைத்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை வித்தியாசமான கதையம்சம் நிறைந்த திரைப்படங்கள் வந்து சென்றுள்ளது. அந்த வரிசையில் வெளி வந்த திரைப்படம் தான் அன்பே சிவம்.

இந்த திரைப்படமானது 2003 ஆம் ஆண்டு வெளி வந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் கமலஹாசன், மாதவன், கிரண், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

அன்பே சிவம்..

சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த அன்பே சிவம் படத்தை தயாரிப்பாளர் கே முரளிதரன், வி சுவாமிநாதன் மற்றும் ஜி வேணுகோபால் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை கமலஹாசன் உடையது. இசை வித்யாசாகர் அமைக்க வசனத்தை மதன் எழுதியிருந்தார்.

இந்தப் படம் குறித்து அண்மை பேட்டி ஒன்றில் ரசிகர் ஒருவர் சுந்தர் சி இடம் எழுப்பிய கேள்விக்கு அவர் உண்மையான பதில் வேண்டுமா? அல்லது பொய்யான பதில் வேண்டுமா? என்று கேட்டதை அடுத்து உங்களுக்கு தோன்றியதை கூறுங்கள் என்று சொல்லி அந்த ரசிகர் பேசுவதை நிறுத்திவிட்டார்.

ஆதாயத்தை விட இழப்பு அதிகம்..

இந்நிலையில் தற்போது அன்பே சிவம் படத்தை இயக்கியதை பற்றி எந்த ஒரு நிலையையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் நான் இந்த இடத்தில் உண்மையை கூறுகிறேன் என்று கூறிய இயக்குனர் சுந்தர் சி, இந்த படத்தை இயக்கியதால் தனக்கு அதிக அளவு இழப்பு ஏற்பட்டதை பதிவு செய்தார்.

யாருமே எதிர்பார்க்காத வித்தியாசகரமான கதைக்களம் கொண்ட இந்த படத்தை இயக்கியதின் மூலம் பெரிய வெற்றி தனக்கு கிடைக்கவில்லை என்றும் இந்த படத்தை இயக்கியதால் ஒரு வருடம் வீட்டில் சும்மா இருந்ததாகவும் பகீர் தகவலை கூறுகிறார்.

அத்தோடு இந்த படத்தை படத்தை அடுத்து ஏன் இது போன்ற படங்களை இயக்கவில்லை என்பதற்கு இது தான் ரீசன் என்று கூறிய சுந்தர் சி இப்படிப்பட்ட படம் வெளி வந்த பிறகு தியேட்டர்களில் சென்று பார்த்து என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு ஆதரவை தந்திருந்தால் இது போன்ற படங்களை எடுக்க துணிந்திருப்போம்.

உண்மையைச் சொன்ன சுந்தர் சி..

ஆனால் அது போன்ற ஆதரவை தராமல் இந்த படத்தை சூப்பராக இயக்கி இருக்கிறீர்கள் என்று சொல்லுவதால் என்ன பயன்.

எனவே தான் அன்பே சிவம் படத்தை அடுத்து இது போன்ற கதையம்சம் உள்ள படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தாலே எனக்கு பயம் ஏற்படுகிறது. எனவே தான் அது போன்ற படங்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து விட்டேன்.

எனவே அன்பே சிவம் இப்ப படம் பற்றிய உண்மையை எப்போதும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று போட்டு உடைத்த சுந்தர் சி யின் பரபரப்பான பேட்டியை பார்த்து பலரும் அசந்து விட்டார்கள்.

பேட்டியின் மூலம் அன்பே சிவம் படத்தை இயக்கியதால் ஏற்பட்ட பல்வேறு விதமான பாதிப்புகளை சுந்தர் சி வெளிப்படையாக தெரிவித்ததை எடுத்து இதில் எத்தனை சமாச்சாரங்கள் உள்ளதா? என்று ரசிகர்கள் வாய்ப்பிளந்து விட்டார்கள்.

எனவே இனி மேலாவது இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தரக்கூடிய பட்சத்தில் தான் எந்த ஒரு இயக்குனரும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை இயக்க முன் வருவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version