90ஸ் கிட்ஸ்ன் பிரபல VJ மோனிகா-வா இது..? – ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாரே..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான தொகுப்பாளனாக இருப்பவர் வி ஜே மோனிகா பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

அவ்வளவு சீக்கிரம் இவரை எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால், 90களால் செய்திகளின் இறுதியில் வெளியாகும் வானிலையை அறிக்கை வாசிப்பாளராக தினந்தோறும் வீட்டின் வரவேற்பறைக்கு நேரடியாக வந்தவர் மோனிகா அதன் பிறகு சினிமா மற்றும் சீரியல்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

சமீப காலமாக அரசியல் நகர்வு குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடக்கூடிய வீடியோக்கள் என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தனியார் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் வளர்ந்து கொண்டிருந்த நேரம் அது. இதில் வானிலை செய்திகள் வாசித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மோனிகா. சமீப காலமாக சமூக வலைதளங்களில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை பேசி வீடியோ வெளியிட்டு வரும் இவர் அதன் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கிறார்.

சமீப காலமாக சீரியல் மற்றும் சினிமா பக்கம் இவரை பார்க்க முடிவதில்லை. இந்நிலையில் இவர் வெளியிடக்கூடிய வீடியோக்களும் குறைந்துவிட்டன. இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது இன்றைக்கும் என்னை பார்க்கின்ற நிறைய பேர் இருக்கிறார்கள்.

கடந்த கால நினைவுகளை ஞாபகம் வைத்து பேசுகிறார்கள் என்னை பொருத்தவரை அந்த கால வாழ்க்கை இனிமையானது என்று கூறியிருக்கிறார். கல்யாணத்துக்கு பிறகு மீடியாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தேன்.

அதன்பிறகு சீரியல்களில் என் மனதுக்கு பிடித்தது போல வரும் கதாபாத்திரங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தேன். இடையில் சிறு விபத்துக்கு பிறகு சீரியலில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

சமூக வலைதளங்களில் நான் வீடியோ வெளியிடுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் நான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர் கிடையாது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எந்த வித்தியாசமும் பார்க்காமல் என் மனதிற்கு சரி என்று தோன்றக்கூடிய விஷயங்களை பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் நான் வெளியிடக்கூடிய இந்த வீடியோக்களால் சில பிரச்சனைகள் உருவாவது போல எனக்கு தோன்றியது. நான் வீடியோவில் பேசும் விஷயங்களில் நியாயம் இருக்கிறதா..? இல்லையா..? என்றெல்லாம் யோசிக்காமல் நான் பேசவே கூடாது என்பது போல என்னுடைய குடும்பத்தை நோட்டமிட தொடங்கினார்கள்.

என்னுடைய மகன் படிக்கும் பள்ளியை கண்டுபிடித்து அங்கே அவன் விளையாடிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்து வெளியிடுகிறார்கள். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய மகனைக் காட்டி எனக்கு மிரட்டல் விடுத்தார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்த சமயத்தில் என்னுடைய கணவரும் வெளிநாட்டில் இருந்தார் எனவே இது போன்ற விஷயங்களில் அகலக்கால் வைக்க வேண்டாம் என்று வீட்டில் உள்ள பெரியவர்களும் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.

அதனாலேயே நான் இப்போது அமைதியாக இருக்கிறேன். மற்றபடி யாருக்கும் பயந்து ஒதுங்கவில்லை என்று பேசி இருந்தார். இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விஜே மோனிகாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Summary in English : Monica, the 90s favorite anchor, has once again become a sensation on media after her latest pictures went viral. The pictures have been shared by fans and followers on various social media platforms and have been garnering a lot of attention from the public.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version