நடுராத்திரி 1 மணிக்கு கதவை தட்டி.. பிள்ளைகள்தான் பாவம்.. ஆர்த்தி செய்த கொடுமைகள்..! சீக்ரெட்டை சொன்ன பிரபலம்..!

சினிமா வட்டாரத்தில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியின் விவாகரத்து விஷயங்கள் இருந்து வருகின்றன. ஆர்த்தியும் ஜெயம் ரவியும் கிட்டத்தட்ட 18 வருடங்களாக தம்பதிகளாக இருந்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் காதலித்துதான் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் பிரியப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் இருந்து வந்தன. இதற்கான காரணம் என்னவென்று பல்வேறு வகையான விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தன.

1 மணிக்கு கதவை தட்டி

அதில் ஆர்த்தி நைட் பார்ட்டிகளுக்கு செல்வதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் தொடர்ந்து நிறைய இரவு நேர பார்ட்டிகளுக்கு அவர் சென்றதாகவும் அதுதான் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்தியது என்றும் கூறுகின்றனர். மற்றொரு பக்கம் கூறும் பொழுது ஜெயம் ரவியின் மாமியார் தான் தொடர்ந்து ஜெயம் ரவியின் திரைப்படங்களை தயாரித்து வந்தார்.

ஆனால் சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியே பெறவில்லை. இதனால் ஜெயம் ரவியின் மாமியாருக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன் காரணமாகவே ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே சண்டை உருவாகிவிட்டது என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

பிள்ளைகள்தான் பாவம்

இன்னும் சிலர் கூறும் பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பணிபுரிந்த பொழுது ஜெயம் ரவிக்கும் அந்த படத்தில் பணிப்புரிந்த வேறு ஒரு பொண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாகவும் அதனால்தான் இந்த பிரிவு இப்பொழுது ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளரான அந்தணன் இது குறித்து பேட்டியில் கூறும்போது ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு இருந்த அதீத காதல் தான் இந்த மனமுறிவுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. எப்பொழுதுமே ஜெயம் ரவி மீது அதிக அன்புடன் இருக்கும் ஆர்த்தி ஒரு கட்டத்தில் அவர் மீது சந்தேகப்பட துவங்கினார்.

சீக்ரெட்டை சொன்ன பிரபலம்

காதலே கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகமாக மாறியது அதனை தொடர்ந்து அடிக்கடி ஜெயம் ரவிக்கு போன் செய்து எங்கே இருக்கிறார் என்று கேட்பது படப்பிடிப்பு தளத்துக்கு அவரிடம் சொல்லாமல் வருவது என்றெல்லாம் செய்திருக்கிறார். சில நேரங்களில் நள்ளிரவில் அவருடைய அறையின் கதவை தட்டி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் ஆர்த்தி.

இந்த மாதிரியான விஷயங்கள் ஜெயம் ரவிக்கு டார்ச்சர் ஆக இருந்தாலும் கூட தனது பிள்ளைகளுக்காக அனைத்தையும் பொறுத்து  போனார் ஜெயம் ரவி. ஆனால் தொடர்ந்து இதை அனுபவிக்க முடியாமல் தற்சமயம் இப்படியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். ஆனாலும் கூட இதில் ஆர்த்திக்கு விருப்பமில்லை என்று தெரிகிறது என்று இந்த விஷயம் குறித்து பேசி இருக்கிறார் அந்தணன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version