நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகையாக இருக்கிறார். பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில்தான் ஆண்ட்ரியா அறிமுகமானார்.
தொடர்ந்து வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். எந்தவிதமான நடிப்பிலும் தனக்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நல்ல நடிகையாக இருக்கிறார்.
ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா, திறமையான நடிகை மட்டுமல்ல. பல பாடல்களை பாடியிருக்கிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா, ஊகூம் சொல்றியா மாமா பாடலை பாடியவர் ஆண்ட்ரியதான்.
அந்நியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடியவரும் ஆண்ட்ரியதானா். வேட்டையாடு விளையாடு படத்தில் காக்க காக்க பாடலை பாடியதும் ஆண்ட்ரியாதான். இப்படி ஒரு பாடகியாகவும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிகை, பாடகி மட்டுமின்றி பிரபல நடிகைகளுக்கு பின்னணி குரல், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் ஆண்ட்ரியா இருக்கிறார்.
பின்னணி குரலில்…
அந்த வகையில் வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும், ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும் பின்னணி குரலில் பேசியவர், ஆண்ட்ரியாதான்.
வயது 40களை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வரும் ஆண்ட்ரியா, சமீபத்தில் தனது காதலனால் பல கொடுமைகளுக்கு ஆளானது குறித்தும், உடல் ரீதியாக, மன ரீதியாக தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும் பேசியிருந்தார். அது வைரலானது.
இதையும் படியுங்கள்: படையப்பா படத்துல முதலில் ஹீரோயினா நடிச்சது யாரு தெரியுமா..? இதோ பாருங்க..
11 வயது இருக்கும்
இப்போது மீண்டும் ஒரு சம்பவத்தை பற்றி ஆண்ட்ரியா கூறியிருக்கிறார். நானும் என் அப்பாவும் பஸ்சில் போய்க்கொண்டு இருந்தோம். எனக்கு அப்போது 11 வயது இருக்கும். நான் அப்போது ஜீன்ஸ் பேண்ட்டும், டீ சர்ட்டும் அணிந்திருந்தேன்.
டீ சர்ட்டுக்குள்…கை
அப்போது ஒரு நபரின் நகை என் டீ சர்ட்டுக்குள் வருவதை போல் நான் உணர்ந்தேன். அப்போது நான் அங்கிருந்து எழுந்துவந்து முன்னாடி அமர்ந்துவிட்டேன். இந்த விஷயத்தை பற்றி நான் என் அப்பா, அம்மாவிடம் கூறவில்லை. அது ஏன் நான் அப்படி கூறாமல் விட்டேன் என்றும் எனக்கு தெரியவில்லை.
இதையும் படியுங்கள்: கணவரை பிரிந்து ஒரு வருஷம்.. ஆனா.. பந்து நடிகை இப்போ நாலு மாசம்.. அட கன்றாவிய…
அப்போதே கூறியிருந்தால்…
இதுகுறித்த என் அப்பாவிடம் நான் அப்போதே கூறியிருந்தால் அதற்கான நடவடிக்கையை உடனே அவர் எடுத்திருப்பார். அதனால்தான் நான் அப்படி செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் அந்த வகையில்தான் நாம் சமுதாயத்தில் வளர்க்கப்பட்டு இருக்கிறோம். இதைப்பற்றி நீங்கள் பெரியதாக பேச வேண்டாம் என்பதையே இந்த சமூகமும் விரும்புகிறது, என்று அதில் கூறியுள்ளார் ஆண்ட்ரியா.
ஆடைக்குள் கையை விட்ட அந்த நபர்
11வது வயதில் தன்னுடைய ஆடைக்குள் கையை விட்ட அந்த நபர் குறித்தும், மோசமான அனுபவம் குறித்தும் ஆண்ட்ரியா இன்னும் மறக்கவில்லை என்றால், அந்த தகாத சம்பவம் அவருக்குள் மிகப்பெரிய துன்பத்தை ஏற்படுத்தியது தெரிகிறது.