குட்டியான உடையில் கண்டதையும் காட்டி கிறங்கடிக்கும் ஆண்ட்ரியா.. வைரல் போட்டோஸ்..!

சினிமாவில் நடிக்க முதலில் நடிப்பை கற்றுக்கொண்டு நடிக்க வர வேண்டும் என்ற ஒரு பார்மூலா, 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக, கவர்ச்சி காட்டத் தெரிந்தால் போதும். ரசிகர்களுக்கு சலித்துப் போகும் வரை, சினிமாவில் இருந்து விடலாம் என்ற மனோபாவத்துடன் சினிமாவுக்குள் வரும் நடிகைகள்தான் அதிகம் இருக்கின்றனர்.

ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் மேனன். அவரது இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா.

இந்த படத்தில் ஜோதிகா, வில்லி கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை ஆண்ட்ரியா வெளிப்படுத்தியதால், தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வெற்றிமாறன் இயக்கத்தில், வடசென்னை படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில்அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார்.

கமல் தந்த வாய்ப்பு

ஆண்ட்ரியாவின் திறமையை பார்த்து வியந்த நடிகர் கமல்ஹாசன், விஸ்வரூபம் விஸ்வரூபம் 1 விஸ்வரூபம் 2 மற்றும் உத்தமவில்லன் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை தந்தார்.

அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் ஆண்ட்ரியாவின் வில்லி நடிப்பு, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

ஊ சொல்றியா மாமா

ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்ல, மிகச் சிறந்த பாடகி என்பது பலருக்கும் தெரியாது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற சமந்தா குத்தாட்டம் போடும் பாடலை பாடியவர் ஆண்ட்ரியா தான்.

பாடகி – டப்பிங் கலைஞர்

அதேபோல் அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடலையும் ஆண்ட்ரியதான். அத்துடன் வேட்டையாடு விளையாடு படத்திலும் காக்க காக்க என்ற பாடலை பாடிய ஆண்ட்ரியா, அந்த படத்தின் நாயகி கமலினி முகர்ஜிக்கு பின்னணி குரல் கொடுத்து டப்பிங் பேசியிருந்தார் ஆண்ட்ரியா.

மதராச பட்டணம் படத்தில் பூக்கள் பூக்கள் தருணம் பாடலில் ஒலிப்பதும் ஆண்ட்ரியா குரல்தான். அடுத்து ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரல் பேசி இருந்தார் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று பாடி வருகிறார். குறிப்பாக யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பெரிய இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சிகள் வெளிநாடுகள் நடக்கும் போது ஆண்ட்ரியா, கட்டாயம் அந்த இசைக்கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.

வெளிநாடு இசை கச்சேரிகளில் ஆண்ட்ரியா பாடுவதை நேரில் கேட்கவும், ஆண்ட்ரியாவை நேரில் பார்க்கவும் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து கொண்டு வருகிறது.

பிசாசு 2 படத்தில் …

இப்போது நடிகை ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழில் மேலும் நான்கு படங்களில் நடிக்க கமிட்டாகி, நடித்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. இந்த படங்கள் எல்லாம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டதையும் காட்டி கிறங்கடிக்கும்…

தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில், அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார் ஆண்ட்ரியா. அந்த சூழ்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் ஜாலியாக ஸம்மர் நாட்களை கொண்டாடும் வகையில் அவர் எடுத்துள்ள புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் ஆண்ட்ரியா பதிவிட்டுள்ளதால் அவை செம வைரலாகி வருகின்றன.

அதுவும் குட்டியான உடையில் கண்டதையும் காட்டி கிறங்கடிக்கும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் செமையாக வைரலாகின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam