சரியான ஆள் நீ.. லெக்கின்ஸ் விளம்பரத்தில் ஆண்ட்ரியா.. வைரலாகும் போட்டோஸ்..! குவியும் லைக்குகள்..!

ஆண்ட்ரியாவின் முழு பெயர் ஆண்ட்ரியா ஜெராமையா. ரஜினிக்கு சினிமாவில் மூன்று முகம் போல, ஆண்ட்ரியாவுக்கு நிஜத்திலும் மூன்று முகம் உள்ளது.

அவர் ஒரு பாடகி, ஒரு நடிகை மற்றும் பின்னணி குரலில் பேசும் டப்பிங் கலைஞர்.

ஆண்ட்ரியா

வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கு பின்னணி பேசியது,
நண்பன் படத்தில் இலியானா குரலில் பேசியது, ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு பின்னணி குரலாய் இருந்தது ஆண்ட்ரியா தான்.

பல ஹிட் பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா. உதாரணமாக ஒன்று சொல்ல வேண்டுமென்றால், புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா, ஊஹூம் சொல்றியா பாடலை பாடியவர் ஆண்ட்ரியா தான்.

நடிகையாக பல படங்களில் ஆண்ட்ரியா தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம், அரண்மனை 2, விஸ்வரூபம், வடசென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களை சொல்லலாம்.

நல்ல நடிகையாக, நல்ல பாடகியாக, நல்ல டப்பிங் கலைஞராக தன்னை வெளிப்படுத்தி சினிமாவில் ஜெயித்து வரும் ஆண்ட்ரியா, இப்போது விளம்பர படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார்.

சினிமாவில் தொடர் வாய்ப்புகள் கிடைக்கா விட்டாலும், வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று பாடி வருகிறார் ஆண்ட்ரியா.

லெக்கின்ஸ் விளம்பரம்

மற்ற நடிகைகளை போல, ஆண்ட்ரியாவும் இப்போது விளம்பர படங்களில் நடிக்க துவங்கி விட்டார்.

சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா லெக்கின்ஸ் விளம்பரத்தில் நடித்திருக்க கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வழக்கமாக தொடை அழகி என்று நடிகை ரம்பா வைதான் முன்பு ரசிகர்கள் வர்ணித்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது அந்த பெயர் ஆண்ட்ரியாவுக்கு கிடைத்து விட்டது.

சரியான ஆள் நீ

ரசிகர்களால் தொடை அழகி என்று வர்ணிக்கப்படும் நடிகை ஆண்ட்ரியா லெக்கின்ஸ் விளம்பரத்தில் நடித்திருப்பதை தொடர்ந்து, இந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு சரியான ஆள் நீ என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

லெக்கின்ஸ் விளம்பரத்தில் ஆண்ட்ரியா போட்டோஸ் வைரலாகி வரும் நிலையில், லைக்குகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version